பொது செய்தி

தமிழ்நாடு

சாலையாக மாறிய நீர் பாசன கால்வாய்

Added : நவ 10, 2021
Share
Advertisement
அதிகத்துார் : அதிகத்துார் ஊராட்சியில் ஏரியிலிருந்து வரும் நீர பாசான கால்வாய் சாலையாக மாறியதால் வயல்களில் தேங்கிய மழை நீரால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது அதிகத்துார் ஊராட்சி. இங்குள்ள பெரிய ஏரியை நம்பி 40க்கும் மேற்பட்ட விவசாயிகள், 150 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த ஏரியிலிருந்து வரும்
 சாலையாக மாறிய நீர் பாசன கால்வாய்

அதிகத்துார் : அதிகத்துார் ஊராட்சியில் ஏரியிலிருந்து வரும் நீர பாசான கால்வாய் சாலையாக மாறியதால் வயல்களில் தேங்கிய மழை நீரால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது அதிகத்துார் ஊராட்சி. இங்குள்ள பெரிய ஏரியை நம்பி 40க்கும் மேற்பட்ட விவசாயிகள், 150 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த ஏரியிலிருந்து வரும் நீர் பாசன கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால், புதர் மண்டி காணப்படுகிறது. சில பகுதியில் நீர் பாசன கால்வாய் சாலையாக மாறிவிட்டது.

இதனால், தற்போது பெய்த மழையில் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் வரும் நவரை பருவத்தில் பயிர் செய்வது எப்படி விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையாக மாறிய நீர் பாசன கால்வாயை மீட்டு சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதுகுறித்து ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அதிகத்துார் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X