போலீஸ் செய்திகள்

Added : நவ 10, 2021
Share
Advertisement
'சீட்'டில் மழைநீர்; பயணி மீது தாக்குதல்மதுரை: பைபாஸ் ரோடு நேரு நகர் சிவா 31. சென்னை செல்ல ஆம்னி பஸ் ஒன்றில் 'புக்' செய்தார். இவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் மழைநீர் இருந்தது. வேறு 'சீட்' கேட்க வாக்குவாதம் ஏற்பட்டது. அவரை டிரைவர் அடித்தார். மாட்டுத்தாவணி போலீசார் விசாரிக்கின்றனர்.சிகரெட் தீப்பிடித்து முதியவர் பலிமதுரை: யாகப்பா நகர் முத்துநாகு 80. வீட்டில் சிகரெட்

'சீட்'டில் மழைநீர்; பயணி மீது தாக்குதல்

மதுரை: பைபாஸ் ரோடு நேரு நகர் சிவா 31. சென்னை செல்ல ஆம்னி பஸ் ஒன்றில் 'புக்' செய்தார். இவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் மழைநீர் இருந்தது. வேறு 'சீட்' கேட்க வாக்குவாதம் ஏற்பட்டது. அவரை டிரைவர் அடித்தார். மாட்டுத்தாவணி போலீசார் விசாரிக்கின்றனர்.

சிகரெட் தீப்பிடித்து முதியவர் பலி

மதுரை: யாகப்பா நகர் முத்துநாகு 80. வீட்டில் சிகரெட் புகைத்தபோது அவரது ஆடையில் தீப்பிடித்தது. காயமுற்று அரசு மருத்துவமனையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

போலீஸ் போல் நடித்து நகை திருட்டு

மதுரை: காமராஜர் ரோடு பொற்செல்வி 54. நேற்றுமுன்தினம் காலை முனிச்சாலை பகுதியில் நடந்து வந்தபோது 2 பேர் தங்களை போலீஸ் என்றுக்கூறி, நகைகளை பத்திரமாக அணிந்துச்செல்லுமாறு கூறினர். அவருக்கு உதவுவது போல் பேப்பரில் நகைகளை மடித்து கொடுத்தனர். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அதில் நகை இல்லாதது தெரிந்தது. 21 பவுன் நகைகளுடன் தலைமறைவான இருவரையும் தெப்பக்குளம் போலீசார் தேடுகின்றனர்.

மனைவி பிரிந்ததால் கணவன் தற்கொலை

வாடிப்பட்டி: போடிநாயக்கன்பட்டி ராஜ்குமார் 36. கொடைரோடு அருகே உள்ள தொழிற்சாலை சீனியர் டெக்னீசியனாக வேலை பார்த்தார். குடும்ப பிரச்னையால் கடந்த மாதம் மனைவி லாவண்யா, மகனுடன் பிரிந்து சென்றார். விரக்தியில் ராஜ்குமார் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

9730 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

அவனியாபுரம்: அவனியாபுரத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்திற்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., கார்த்திகை செல்வத்துடன் காவேரி நகர் கோடவுன் ஒன்றில் சோதனை செய்து 9730 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.கோடவுன் பொறுப்பாளர் மாரிசெல்வம், உதவியாளர் மணிகண்டன், சந்தானம், ரேஷன் கடை ஊழியர்கள் முகமது ஜாகீர் அலி, செல்வகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

வைகையில் உடல் மீட்பு

வாடிப்பட்டி: திருப்பூர் விஸ்வநாதன் 21, வசந்த் 18. மதுரை பரவை கோயில் திருவிழாவிற்காக உறவினர் வைரமுத்து வீட்டிற்கு வந்தனர். நவ.,6ல் நண்பர் கரிசல்குளம் சரவணக்குமாருடன் 19, பரவை வைகையில் குளித்தபோது விஸ்வநாதன், வசந்த் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் பழனிமுத்து தலைமையில் தேடிவந்த வீரர்கள் நவ.,8 வசந்த் உடலை கோச்சடை அருகே மீட்டனர். நேற்று காலை விஸ்வ நாதன் உடலை ஆரப்பாளையம் அருகே மீட்டனர்.

தவறவிட்ட பணம் ஒப்படைப்பு

திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி மெகராஜ் பானு 50. திருமங்கலம் உறவினர் வீட்டிற்கு செல்லும் முன் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள பேக்கரியில் ஸ்வீட் வாங்க சென்ற போது ரூ. 9 ஆயிரம் வைத்திருந்த பையை மறந்து வைத்துவிட்டு சென்றார்.கடை ஊழியர் சிராஜ் 45, பையை டவுன் போலீசில் ஒப்படைத்தார். மெகராஜ்பானுவை கண்டுபிடித்து எஸ்.ஐ., மாரிக்கண்ணன், எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டு அழகர் பணத்தை ஒப்படைத்தனர். சிராஜை பாராட்டினர்.

26 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி கண்ணன் 45, வீட்டில் எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ 480 கிராம் புகையிலை, குட்கா பாக்கெட்களை பறிமுதல் செய்து கண்ணனை கைது செய்தனர்.

ஆயுதங்களுடன் கைது

அவனியாபுரம்: மேல அனுப்பானடி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் ஒருவர் ஓடினார். அவரை பிடித்து சோதனையிட்டதில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரிந்தது. அவர் மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனி பாண்டி மகன் காளீஸ்வரன் 33, எனத்தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

ரவுடி கொலை: நண்பர்கள் கைது

சோழவந்தான்: கரட்டுப்பட்டி கோட்டைச்சாமி 22. ரவுடியான இவர் நவ.,7 ல் கொலை செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையிலான போலீசார், நண்பர்கள் நாச்சிகுளம் பூவேந்திரன் 24, கரட்டுப்பட்டி சகோதரர்கள் ஜெயசூர்யா 23, சுபாஷ் 21, மற்றும் சிவா 20, ஆகியோரை கைது செய்தனர். பூவேந்திரனின் ஜல்லிக்கட்டு காளை கன்று குட்டியை கோட்டைச்சாமி திருடி விற்றது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் 4 பேரும் கொலை செய்து கல்லை கட்டி கிணற்றில் போட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் உடலை அடையாளம் காட்டியது முதல் இறுதி சடங்கு வரை நால்வரும் அழுது நாடகமாடினர். இதில் ஜெயசூர்யா, சுபாஷ் 2016ல் கோட்டைச்சாமியுடன் சேர்ந்து கொலை ஒன்றை செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X