தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முதல்வர் மவுன விரதம் ஏன்? முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி

Added : நவ 10, 2021
Share
Advertisement
டி.கல்லுப்பட்டி : ''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மவுன விரதம் இருப்பது ஏன்'' என டி.கல்லுப்பட்டியில் புறநகர் அ.தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில் தி.மு.க., அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.அவர் பேசியதாவது: பெரியாறு அணை விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி
 முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முதல்வர் மவுன விரதம் ஏன்? முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி

டி.கல்லுப்பட்டி : ''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மவுன விரதம் இருப்பது ஏன்'' என டி.கல்லுப்பட்டியில் புறநகர் அ.தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில் தி.மு.க., அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

அவர் பேசியதாவது: பெரியாறு அணை விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி நிறைவேற்றி தந்த உரிமையை தி.மு.க., அரசு காவு கொடுத்துவிட்டது. ஸ்டாலின் பெரியாறு அணை விவகாரத்தில் மவுன விரதம் இருப்பது ஏன். இவ்விவகாரத்தில் தமிழக அரசு உறுதியோடு நின்று தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தவறினால் தமிழக வரைபடத்தில் இருந்து தென் தமிழகம் காணாமல் போய்விடும். எனவே ஜெயலலிதா கொடுத்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தில் வாதங்களை தமிழக அரசு முன்வைக்க வேண்டும் என்றார்.

உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன், ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல், மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., நகர் மாவட்டம் சார்பில் மதுரை முனிச்சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலுாரில் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் முன்னிலை வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X