பொது செய்தி

தமிழ்நாடு

6 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய முருக்கம்பட்டு ஏரி

Added : நவ 10, 2021
Share
Advertisement
திருத்தணி : ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது பெய்து வரும் தொடர் மழையால், முருக்கம்பட்டு ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, 2015ம் ஆண்டு பெய்த கன மழையால் நிரம்பி வழிந்தது.ஏரியில் தண்ணீர் இருந்ததால், ஓராண்டு, விவசாயிகள் நெல், வேர்க்கடலை போன்றவற்றை பயிரிட்டிருந்தனர். இதையடுத்து, ஏரி வறண்டு
 6 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய முருக்கம்பட்டு ஏரி

திருத்தணி : ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது பெய்து வரும் தொடர் மழையால், முருக்கம்பட்டு ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, 2015ம் ஆண்டு பெய்த கன மழையால் நிரம்பி வழிந்தது.ஏரியில் தண்ணீர் இருந்ததால், ஓராண்டு, விவசாயிகள் நெல், வேர்க்கடலை போன்றவற்றை பயிரிட்டிருந்தனர். இதையடுத்து, ஏரி வறண்டு இருந்ததால், விவசாயிகள் பயிரிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், வடகிழக்கு பருவ மழையால், சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், முருக்கம்பட்டு ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால், முருக்கம்பட்டு பெரிய ஏரி நிரம்பி, உபரி நீர் கடைவாசல் வழியாக வெளியேறுகிறது.ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஏரி நிரம்பி வழிவது தகவல் அறிந்ததும் முருக்கம்பட்டு கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், அப்பகுதி மக்கள், கடைவாசல் வழியாக வெளியேறும் தண்ணீரில் குளித்தும், 'செல்பி' எடுத்தும் மகிழ்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X