குடிக்க தண்ணீர் இல்லீங்க... வலையபட்டி மக்கள் வருத்தம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சியில் அம்மாபட்டி, வலையபட்டி கிராமங்கள் உள்ளன. அம்மாபட்டி கண்மாய்க்கான கால்வாயை ஆக்கிரமித்து பிளாட்டுகள் அமைத்துள்ளனர். இதனால் நீர் வரத்து பாதித்துள்ளது. வயல் பகுதி மின் கம்பங்களின் கம்பிகள் மிகவும் தாழ்வாக இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம்

திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சியில் அம்மாபட்டி, வலையபட்டி கிராமங்கள் உள்ளன. அம்மாபட்டி கண்மாய்க்கான கால்வாயை ஆக்கிரமித்து பிளாட்டுகள் அமைத்துள்ளனர். இதனால் நீர் வரத்து பாதித்துள்ளது.

வயல் பகுதி மின் கம்பங்களின் கம்பிகள் மிகவும் தாழ்வாக இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி கிடக்கிறது. வலையபட்டி மேல்நிலை தண்ணீர் தொட்டி சேதமுற்று பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.

காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பைப்கள் மட்டும் அமைத்த நிலையில், தண்ணீர் வினியோகம் இதுவரை இல்லை. தனியார் தொண்டு நிறுவனத்தின் குடிநீரை நம்பி மக்கள் உள்ளனர். இங்குள்ள ஊரணி தூர்ந்து போய் பாசம் பிடித்து கொசு உற்பத்தி மையமாக உள்ளது. அங்கன்வாடி புதுக்கட்டடம் பல மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது.

வலையபட்டி குருநாதன்: எங்கள் கிராமத்தை பல ஆண்டுகளாக ஊராட்சி தலைவர்கள் யாரும் கண்டுகொள்வதே இல்லை. அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே உள்ளது என்றார்.

ஊராட்சி தலைவர் கல்பனா: போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் இணைப்பு வழங்கி குடிநீர் விநியோகத்தை தொடங்க இயலவில்லை. ஊரணியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மின் கம்பிகள் தனியார் இடங்களில் செல்வதால் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X