பொது செய்தி

தமிழ்நாடு

காலாவதி உரங்களால் விவசாய நிலங்கள் பாதிப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
மேலுார் : மேலுார் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., பிர்தெளஸ் பாத்திமா தலைமையில் தாசில்தார் இளமுருகன் முன்னிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.விவசாயிகள் ராஜமாணிக்கம், பழனிசாமி, பன்னீர்செல்வம், கிருஷ்ணன், கோபாலன், கதிரேசன் பேசியதாவது: நீர் பிடிப்புகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டம் இயற்றப்பட்டு 15 ஆண்டுகளாகியும் பொதுப்பணித்துறையினர் அகற்றவில்லை.

மேலுார் : மேலுார் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., பிர்தெளஸ் பாத்திமா தலைமையில் தாசில்தார் இளமுருகன் முன்னிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

விவசாயிகள் ராஜமாணிக்கம், பழனிசாமி, பன்னீர்செல்வம், கிருஷ்ணன், கோபாலன், கதிரேசன் பேசியதாவது: நீர் பிடிப்புகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டம் இயற்றப்பட்டு 15 ஆண்டுகளாகியும் பொதுப்பணித்துறையினர் அகற்றவில்லை. உடைகல் கால்வாய்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பெரிய அருவியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கச்சிராயன்பட்டி, வஞ்சிநகரம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன மற்றும்நீட்டிப்பு கால்வாய்கள் பராமரிப்பின்றி முற்றிலும் அழிந்துவிட்டது. 4 ஆண்டுகளாக பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுதொகை கிடைக்கவில்லை.

டி.ஏ.பி., உரத்தினால் நிலங்கள் பாதித்துவிட்டன. மேலும் கலப்பட உரங்கள் விற்கின்றனர். மேலுார் பகுதிகளில் காலாவதி உரம், மருந்துகள் விற்கப்படுகின்றன. அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளலுார் விரிவாக்க மையம் ஒழுகுவதால் விதை நெல் மற்றும் இடு பொருட்கள் மழைநீரில் நனைகிறது. எட்டியேந்தல் கண்மாயை ஆவணத்தில் நிலமாக மாற்றியதால் கண்மாயை காணோம் என்கிற நிலைஏற்பட்டுள்ளது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X