நவ. 12 வேலை வாய்ப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நவ. 12 வேலை வாய்ப்பு முகாம்

Added : நவ 10, 2021
Share
மதுரை : மதுரை கே.புதுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவ., 12 காலை 10:00 மணிக்கு நடக்கிறது.தனியார் தொழில் நிறுவனங்கள் இம்முகாமில் தேவையான ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்து வேலை தேடுவோர் தங்கள் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெறலாம். வேலை தேடுவோர்,

மதுரை : மதுரை கே.புதுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவ., 12 காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

தனியார் தொழில் நிறுவனங்கள் இம்முகாமில் தேவையான ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்து வேலை தேடுவோர் தங்கள் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெறலாம். வேலை தேடுவோர், வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். பங்கேற்க விரும்புவோர் கல்விச்சான்று, ஆதார், ரேஷன்கார்டு, போட்டோக்களுடன் அன்று பங்கேற்கலாம் என மைய துணை இயக்குனர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X