பொது செய்தி

தமிழ்நாடு

குன்றத்தில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த சுப்பிரமணிய சுவாமி; இன்று தேரோட்டம் ரத்து

Added : நவ 10, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டி சூரசம்ஹார லீலை நடந்தது. இன்று (நவ.,10) தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.கோயிலில் நவ.,4 முதல் நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு, தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் இருந்த புனித நீரால் சண்முகர், வள்ளி,
 குன்றத்தில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த சுப்பிரமணிய சுவாமி; இன்று தேரோட்டம் ரத்து

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டி சூரசம்ஹார லீலை நடந்தது. இன்று (நவ.,10) தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

கோயிலில் நவ.,4 முதல் நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு, தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் இருந்த புனித நீரால் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.மாலையில் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி சிம்மாசனத்திலும் வீரபாகு தேவர் படிச்சட்டத்திலும் கோயில் திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர்.


சூரசம்ஹாரம்


சூரபத்மன் முன்செல்ல, வீரபாகு தேவர் விரட்டி செல்ல, தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியார் வாள் கொண்டு செல்ல, அவர்களை தொடர்ந்து சுவாமி வேலுடன் சூரனை எட்டு திக்குகளிலும் விரட்டிச் சென்று சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு சூரசம்ஹார புராண கதையை, பக்தர்களுக்கு சிவாச்சாரியார் கூறினார்.

உற்ஸவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மாலை மாற்றி, தீபாராதனை நடந்தது.சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் சூரசம்ஹாரத்தன்று மாவிளக்கு வைத்து விரதத்தை முடிப்பர். நேற்று கோயில் முன்பும், பசுபதீஸ்வரர் சன்னதி முன்பும் மாவிளக்கு வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X