பொது செய்தி

தமிழ்நாடு

மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: கமிஷனர்

Added : நவ 10, 2021
Share
Advertisement
மதுரை : மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மாநகராட்சி மண்டலம் 2ல் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கமிஷனர் தலைமையில் நடந்தது.வீடு, சொத்து, தொழில் வரிகள், பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, பாதாள சாக்கடை, குடிநீர், ரோடு, தெருவிளக்கு வசதி உட்பட பல கோரிக்கைகள்

மதுரை : மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மாநகராட்சி மண்டலம் 2ல் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கமிஷனர் தலைமையில் நடந்தது.வீடு, சொத்து, தொழில் வரிகள், பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, பாதாள சாக்கடை, குடிநீர், ரோடு, தெருவிளக்கு வசதி உட்பட பல கோரிக்கைகள் தொடர்பான 103 மனுக்களை கமிஷனர் பெற்றார். மனுக்களை கணினியில் பதிவு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க கூறினார்.

கடந்த முகாமில் பெறப்பட்ட 206 மனுக்களில் 175 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். மீதமுள்ள மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.உதவி கமிஷனர் அமிர்தலிங்கம், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் முருகேச பாண்டியன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X