பொது செய்தி

இந்தியா

இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: 96 நாடுகளில் ஏற்பு

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021
Share
Advertisement
புதுடில்லி : நம் நாட்டில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 96 நாடுகள் ஒப்புதல் தெரிவித்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறி உள்ளார்.நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடக்கிறது. நேற்று வரை செலுத்திய 'டோஸ்'களின் எண்ணிக்கை 110 கோடியை நெருங்கி உள்ளது.முழுமையாக தடுப்பூசி செலுத்தியோர் பிற நாடுகளுக்கு
Corona Virus, Covid 19, Vaccination Certificate

புதுடில்லி : நம் நாட்டில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 96 நாடுகள் ஒப்புதல் தெரிவித்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறி உள்ளார்.

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடக்கிறது. நேற்று வரை செலுத்திய 'டோஸ்'களின் எண்ணிக்கை 110 கோடியை நெருங்கி உள்ளது.முழுமையாக தடுப்பூசி செலுத்தியோர் பிற நாடுகளுக்கு பயணிப்பதில் உள்ள தடைகளை அகற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக நம் நாட்டில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழை ஏற்க 96 நாடுகள் சம்மதம் தெரிவித்து உள்ளன.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறியதாவது: கல்வி, வணிகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நம் மக்கள் பிற நாடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது. அவர்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திய பின் வழங்கப்படும் சான்றிதழை ஏற்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து நாம் வழங்கும் தேசிய அளவிலான தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 96 நாடுகள் ஒப்புதல் தெரிவித்து உள்ளன.


latest tamil news



அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், கஜகஸ்தான், ரஷ்யா, இலங்கை, மாலத்தீவுகள், பிரேசில், அர்ஜென்டினா, நேபாளம், குவைத், கொலம்பியா, ஈரான், கத்தார், பாலஸ்தீனம் உள்ளிட்ட 96 நாடுகள் இப்பட்டியலில் அடங்கும்.

பிற நாடுகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. வெளிநாடு செல்ல விரும்புவோர் சர்வதேச பயணத்திற்கான தடுப்பூசி சான்றிதழை 'கோவின்' இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X