ரோட்டோரம் உடைந்த வாறுகால்; சேதமடைந்த ரேஷன் கடை

Added : நவ 10, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்குஉட்பட்ட 12 வது வார்டில் வாறுகால் உடைந்துள்ளதுடன், சேதமடைந்த ரேஷன் கடையில் பொருட்களை பாதுகாக்க வழியின்றி உள்ளது.இந்த வார்டில் எஸ்.எஸ்.கோயில் தெரு, ராமகிருஷ்ணா தெரு, சி.ஆர். தாஸ் தெரு, விவேகானந்தா வாசகசாலை தெரு, புட்டா ராமசாமி சந்து, மாரியம்மன் கோயில் தெரு, ராமலிங்க அடிகளார் தெருக்கள் உள்ளது. 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள்

பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்குஉட்பட்ட 12 வது வார்டில் வாறுகால் உடைந்துள்ளதுடன், சேதமடைந்த ரேஷன் கடையில் பொருட்களை பாதுகாக்க வழியின்றி உள்ளது.

இந்த வார்டில் எஸ்.எஸ்.கோயில் தெரு, ராமகிருஷ்ணா தெரு, சி.ஆர். தாஸ் தெரு, விவேகானந்தா வாசகசாலை தெரு, புட்டா ராமசாமி சந்து, மாரியம்மன் கோயில் தெரு, ராமலிங்க அடிகளார் தெருக்கள் உள்ளது. 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.தற்போது உள்ளாட்சி அமைப்பு இல்லாத நிலையில் இப்பகுதியிலுள்ள ஆழ்குழாய் செயல்படாமல் உள்ளது. புதிய மின் கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்த படாமலும், பழைய மின் கம்பங்களில் எரியாத மின் விளக்குகளும் உள்ளன.

மேலும் எஸ்.எஸ்.கோயில் உள்ளிட்ட பிரதான ரோடுகளில் இருபுறங்களிலும் வாறுகால் சீரமைக்க படாமல் உடைந்துள்ளது. ரேஷன் கடை நகராட்சி கட்டடத்தில் இயங்கினாலும் பழுதடைந்து மழைநீரால் அவ்வப்போது பொருட்கள் சேதம் அடைந்து வருகிறது.அப்பகுதி மக்கள் கூறியதாவது:எம்.என்.ஹரி, சி.ஆர்.தாஸ் தெரு: இந்த வார்டில் எஸ்.எஸ்.கோயில் தெரு தொடங்கும் மதுரை - மண்டபம் ரோடு இணைப்பு சாலையில் கல்வெட்டு பாலம் சேதம் அடைந்துள்ளது. ரோடு ஆங்காங்கே பள்ளமாகி வாறுகால் கட்டப்படாமல்உடைந்து விபத்துக்கு வழிவகுக்கிறது. பரமக்குடி, எமனேஸ்வரத்தை இணைக்கும் தரைப்பாலம் செல்லும் ரோட்டில் ஆக்கிரமிப்பு, கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

எம்.கே.கண்ணன், முன்னாள்கவுன்சிலர், எஸ்.எஸ்.கோயில் தெரு: இங்கு இயங்கும் ரேஷன் கடையில் 2000 கார்டுதாரர்கள் உள்ளனர். இங்கு 9, 10, 11, 12வது வார்டுக்கு உட்பட்ட மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். எப்போதும் நெரிசலில் பொருட்கள் வாங்க சிரமம் ஏற்படுகிறது. மழை பெய்யும் நாட்களில் தெருக்களில் உள்ள தண்ணீர் கடையை சூழ்ந்து உள்ளே சென்று விடுகிறது. இதனால் பொருட்களை பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுவதால் கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு தெருக்களில் மின் விளக்குகள் சீர் அமைக்கப்படாமல் இருளில் மக்கள் தவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X