பொது செய்தி

தமிழ்நாடு

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொழில்துறை பயிற்சி வகுப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
காரைக்குடி : தொழில்நுட்பக் கல்வி இயக்ககமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு தற்போதைய தொழில்துறைக்கு ஏற்பவும், கூடுதல் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும், கல்லுாரி விடுமுறை நாட்களிலும், மாலைநேரத்திலும் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது.இயந்திரயவியல் துறை மாணவர்களுக்கு

காரைக்குடி : தொழில்நுட்பக் கல்வி இயக்ககமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு தற்போதைய தொழில்துறைக்கு ஏற்பவும், கூடுதல் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும், கல்லுாரி விடுமுறை நாட்களிலும், மாலைநேரத்திலும் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது.

இயந்திரயவியல் துறை மாணவர்களுக்கு சி.என்.சி.,ஆப்பரேட்டர், மின்னியல் துறை மாணவர்களுக்கு எலக்ட்ரிகல் அசெம்பிளிங் ஆப்பரேட்டர், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர்களுக்கு பி.எல்.சி., அசெம்பிளிங் ஆப்பரேட்டர் ஆகிய வகுப்புகள் அக்.26 முதல் நடந்து வருகிறது.இயந்திரவியல் துறை சார்பில் 50 மாணவர்களும், மின்னியல்துறையில் 40 மாணவர்களும், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் 20 மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். இவ்வகுப்பு 2022 பிப்.,வரை பயிலகத்தில் நடக்கிறது என கல்லுாரி முதல்வர் சிவகாமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X