தமிழ்நாடு

சிவகங்கைக்கும் 'ரெட் அலர்ட்' ; மீட்புக்கு தீயணைப்பு துறை தயார்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சிவகங்கை : வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் இன்று (நவ.10) சிவகங்கை மாவட்டத்திற்கு வானிலை ஆராய்ச்சி மையம் 'ரெட்' அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளுக்கு தயாராகி வருகின்றனர்.மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான கண்மாய்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிவகங்கை : வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் இன்று (நவ.10) சிவகங்கை மாவட்டத்திற்கு வானிலை ஆராய்ச்சி மையம் 'ரெட்' அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளுக்கு தயாராகி வருகின்றனர்.

மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான கண்மாய்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வயல்களில் புகுந்த மழைநீரால் நெற்பயிர்கள் பாதித்துள்ளன. வானிலை மையத்தின் 'ரெட்' அலர்ட் வரிசையில் சிவகங்கையும் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று (நவ.10) மிக கனமழை இருக்கும் என தெரிவித்துள்ளது.

மீட்பு பணியில் ஈடுபட தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து தன்னார்வ தொண்டர்கள் தயார் படுத்தி வருகின்றனர். பெரிய, சிறிய வாகனங்கள் 9, 2 ரப்பர் படகுகள், லைப் ஜாக்கெட், கயறுகள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட கூடிய பகுதிகளை கண்டறிந்து அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X