பொது செய்தி

தமிழ்நாடு

'மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்வது அவசியம்'; மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : ''பொதுமக்கள் மழைக்கால நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி: மழை தொடர்ந்து பெய்து வந்தாலும், சுகாதாரத் துறை சார்பில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பேரிடர் காலங்களில்


சென்னை : ''பொதுமக்கள் மழைக்கால நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.



latest tamil news


சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி: மழை தொடர்ந்து பெய்து வந்தாலும், சுகாதாரத் துறை சார்பில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பேரிடர் காலங்களில் ஏற்படும் நோயை தடுக்கும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான 160 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் தயாராக உள்ளன.


latest tamil news


தற்போது சென்னையில், 205 மருத்துவ முகாம்கள் வாயிலாக 8,000 பேர் உட்பட, மாநிலம் முழுதும் 1,500 முகாம்களில், 60 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் நடத்தப்படும் முகாம்களின் எண்ணிக்கையை, 500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு ஆளாகாமல், பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது அவசியம்.

மழை பெய்து வருவதால், கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி மீது மக்களுக்கு பயம் வேண்டாம்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
10-நவ-202114:56:55 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ஆட்சிக்கு இடைஞ்சல் செய்யும் மழை மீது கொலை முயற்சி வழக்கு தொடரலாம் ..கொசுக்கள் மீதும் தொடரலாம் அஞ்சி நடுங்கி இந்த பக்கமே வராமல் போய்டும்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-நவ-202106:07:36 IST Report Abuse
Mani . V முதலில் மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு வழி சொல்லுங்கள். பிறகு நோய்க்கு வழி சொல்லலாம். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வடிகால் அமைப்புக்கு ஒதுக்கிய பலப், பல லட்சங்களை தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டதின் பலன், மீண்டும் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X