பொது செய்தி

தமிழ்நாடு

செயற்குழு கூட்டம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கணிப்பாய்வு குழு கூட்டம், ஆளுமைக்குழு, செயற்குழு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி தலைமை வகித்தார். கலெக்டர் சங்கர்லால் குமாவத், எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க., ராமநாதபுரம் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், காங்., திருவாடானை கரு.மாணிக்கம், டி.ஆர்.ஓ., காமாட்சி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கணிப்பாய்வு குழு கூட்டம், ஆளுமைக்குழு, செயற்குழு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி தலைமை வகித்தார். கலெக்டர் சங்கர்லால் குமாவத், எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க., ராமநாதபுரம் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், காங்., திருவாடானை கரு.மாணிக்கம், டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர்.

எம்.பி., கூறியதாவது:நீண்ட இடைவெளிக்கு பிறகு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இரவு டாக்டர்கள் இருப்பதுஇல்லை. பரமக்குடியில் சி.டி.ஸ்கேன் பிரிவில் டாக்டர் இல்லை, ரோடு பணிக்கு கிரவல் கிடைக்கவில்லை என பல்வேறு குறைகள் உள்ளன. மக்களிடம் காலதாமத்திற்கு காரணம் சொல்ல முடியாது. அதிகாரிகள் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்றார்.

பரமக்குடி எம்.எல்.ஏ., கூறியதாவது: பரமக்குடி- பொன்னை யாபுரம் ரயில்வே சப்வே மற்றும் கால்வாயில் தண்ணீர் தேங்குகிறது. உடனடியாக அகற்ற வேண்டும். காவிரி கூட்டுகுடிநீர் சரிவர வருவது இல்லை, இதுதொடர்பாக அதிகாரிகளிடம் சொன்னாலும் உடனடியாக செய்வது இல்லை,' என்றார்.

இதேபோல மழைக்காலம் தாழ்வான மின் வயர்களை செப்பனிட வேண்டும். விவசாயிகளுக்கு காப்பீட்டுதொகை வழங்க வேண்டும். குறிப்பாக உரம் தட்டுபாட்டை போக்க வேண்டும்.மாவட்ட ஊராட்சி, ஒன்றியம், ஊராட்சி மன்றங்களுக்குரிய நிதி வழங்க தாமதம் செய்கின்றனர். சில மருத்துவமனைகளில் 108 வசதியில்லை என தொடர்ந்து மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் புகார் கூறினர். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X