சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளத்தொடர்பால் பெண் கொலை; வாலிபர் கைது

Added : நவ 10, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி அருகே கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் வாலிபரால் கொலை செய்யப்பட்டார்.பரமக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பாகம்பிரியாள் என்ற அன்புசெல்வி, 37. இவருக்கு மகாலிங்கம் என்பவருடன்திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.தொடர்ந்து கருத்து வேறுபட்டால் இருவரும் பிரிந்து வாழும் நிலையில்,வேந்தோணி அருகே அண்ணாநகரைச் சேர்ந்த சேகர், 47, என்பவருடன் பழகி

பரமக்குடி : பரமக்குடி அருகே கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் வாலிபரால் கொலை செய்யப்பட்டார்.

பரமக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பாகம்பிரியாள் என்ற அன்புசெல்வி, 37. இவருக்கு மகாலிங்கம் என்பவருடன்திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.தொடர்ந்து கருத்து வேறுபட்டால் இருவரும் பிரிந்து வாழும் நிலையில்,வேந்தோணி அருகே அண்ணாநகரைச் சேர்ந்த சேகர், 47, என்பவருடன் பழகி வந்துள்ளார்.

இதனால் சேகர் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுஉள்ளது. தொடர்ந்து சேகரின்மகன் சுப்பிரமணியன், 20, நேற்று மாலை பாகம்பிரியாள் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.அப்போது சுப்ரமணியன் கத்தியால் பெண்ணின் கழுத்தில் குத்தி உள்ளார். இதில் காயமடைந்த பெண்ணை பரமக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். டிப்ளமோ படித்து டிரைவர் பணியில் உள்ள சுப்பிரமணியன் பரமக்குடிபோலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X