பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : 'மணிப்பூர் பா.ஜ.,வை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்த பின்னரும் கவர்னர் முடிவெடுப்பதில் காலம் தாழ்த்த கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 12 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கு 2018ல் சட்டசபை செயலர்கள் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது.இரட்டை பதவி வாயிலாக ஆதாயம் பெறுவதாக
Supreme Court,BJP, MLA, உச்ச நீதிமன்றம்,எம்எல்ஏ,பாஜ

புதுடில்லி : 'மணிப்பூர் பா.ஜ.,வை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்த பின்னரும் கவர்னர் முடிவெடுப்பதில் காலம் தாழ்த்த கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 12 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கு 2018ல் சட்டசபை செயலர்கள் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது.இரட்டை பதவி வாயிலாக ஆதாயம் பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இரண்டு சட்டங்கள் வாயிலாக விதிவிலக்கு அளிக்கப்பட்டதன் அடிப்படையில், இந்த கூடுதல் பதவி வழங்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த இரண்டு சட்டங்களை மணிப்பூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து 12 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவிடம் காங்., சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது கருத்து தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கவர்னர் உத்தரவிட்டார்.


latest tamil news



'கூடுதல் பதவி வழங்கப்பட்ட போது இரண்டு சட்டங்களும் நடைமுறையில் இருந்ததால் தகுதி நீக்கம் செய்ய தேவையில்லை' என, தேர்தல் ஆணையம் கருத்து தெரித்தது.இந்த விவகாரத்தில் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா தன் முடிவை அறிவிக்கவில்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், 'தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்த பின்னும், தகுதி நீக்கம் தொடர்பான முடிவை அறிவிப்பதில் கால தாமதம் செய்ய கூடாது' என, நேற்று உத்தரவிட்டது. வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
10-நவ-202115:39:13 IST Report Abuse
Davamani Arumuga Gounder 'கூடுதல் பதவி வழங்கப்பட்ட போது இரண்டு சட்டங்களும் நடைமுறையில் இருந்ததால் தகுதி நீக்கம் செய்ய தேவையில்லை' என, தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்தது..
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
10-நவ-202111:34:50 IST Report Abuse
Raj அவனுங்க MLA வுக்கு என்றால் ஒரு ஞாயம், ஏதிர்க்கட்சி MLA என்றால் வேறு ஞாயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X