பொது செய்தி

தமிழ்நாடு

காயார் குடியிருப்பு, சாலையில் தேங்கிய மழை நீர் அகற்றம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
திருப்போரூர் : காயார் கிராமத்தில் குடியிருப்பு, சாலையில் தேங்கிய மழை நீர் அகற்றும் பணி நடக்கிறது.திருப்போரூர் அடுத்த, காயார் கிராமம், மேட்டுத் தெரு, பள்ளத் தெரு, ஏரிக்கரை தெரு, யாதவர் தெரு, சந்திப்பாட்டை தெரு உள்ளிட்ட தெருக்களில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும்
 காயார் குடியிருப்பு, சாலையில் தேங்கிய மழை நீர் அகற்றம்

திருப்போரூர் : காயார் கிராமத்தில் குடியிருப்பு, சாலையில் தேங்கிய மழை நீர் அகற்றும் பணி நடக்கிறது.திருப்போரூர் அடுத்த, காயார் கிராமம், மேட்டுத் தெரு, பள்ளத் தெரு, ஏரிக்கரை தெரு, யாதவர் தெரு, சந்திப்பாட்டை தெரு உள்ளிட்ட தெருக்களில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக அனைத்து சாலைகளிலும், குடியிருப்பு வீடுகளிலும், மழை நீர் சூழ்ந்து தேங்கியது. மழை நீர் தேக்கத்தால், பொதுமக்கள் அவதிப்பட்டுவந்தனர்.இதை அறிந்த ஊராட்சி தலைவர் ரமேஷ், துணை தலைவர் சுமித்ரா ஸ்ரீதர் மற்றும் எட்டு வார்டு உறுப்பினர்கள் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர். மேலும், அனைத்து நீர்வரத்து கால்வாய் அடைப்பை துார்வாரி மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X