நீரில் மூழ்கிய நெற் கதிர்கள் பல தரப்பு விவசாயிகள் பாதிப்பு

Added : நவ 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாலாஜாபாத் : நீரில் மூழ்கிய நெற்கதிர்கள், முளைக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது என, பல தரப்பு விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், குன்றத்துார் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 75 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பருவத்தில், விவசாயிகள் நெல் நடவு செய்தனர். அவை, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.கடந்த அக்டோபர் மாதத்தில்,
 நீரில் மூழ்கிய நெற் கதிர்கள் பல தரப்பு விவசாயிகள் பாதிப்பு

வாலாஜாபாத் : நீரில் மூழ்கிய நெற்கதிர்கள், முளைக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது என, பல தரப்பு விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், குன்றத்துார் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 75 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பருவத்தில், விவசாயிகள் நெல் நடவு செய்தனர். அவை, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.கடந்த அக்டோபர் மாதத்தில், பெரும்பாலான விவசாயிகள் நெல் அறுவடை செய்து முடித்து உள்ளனர்.

ஒரு சில விவசாயிகள் மட்டுமே தீபாவளிக்கு பின், அறுவடை செய்யலாம் என, காத்திருந்தனர்.அதற்குள், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை துவக்கம் என, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் நீரில் மூழ்கியது.நீரில் மூழ்கிய நெற்கதிரை காப்பதற்கு, வயலில் தேங்கி இருக்கும் தண்ணீரை, விவசாயிகள் அகற்றி வருகின்றனர். உலர்ந்த நிலத்தில் நெல் மணிகள் முளைக்க துவங்கி உள்ளது.

குறிப்பாக, வாலாஜாபாத் ஒன்றியம், மூலபட்டு, பள்ளம்பாக்கம், புள்ளலுார், புதுப்பாக்கம், வேளியூர் உள்ளிட்ட பல கிராமங்களில், 2,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் நெற்கதிரில் முளைப்பு ஏற்பட்டு விவசாயம் வீணாகி உள்ளது என, விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து, மூலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வம் கூறியதாவது:மழை நீரில் மூழ்கிய நெற்பயிரை அறுவடை செய்வதற்கு, வயலில் தேங்கி இருந்த தண்ணீரை கால்வாய் வெட்டி வடித்தோம். நெற்கதிர் காற்று ஆறிய பின் முளைக்க துவங்கி உள்ளது. அந்த நெல்லை மீண்டும் அறுவடை செய்தாலும் விற்பனை மற்றும் சாப்பாட்டிற்கு கூட ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அரசு முறையாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-202117:19:32 IST Report Abuse
சம்பத் குமார் 1). இயற்கை பேரிடர் மற்றும் தவிர்க்க முடியாத பயிர் விளைச்சல் பாதிப்பு போன்றவற்றுக்கு தான் பயிர் காப்பீடு உள்ளது.2).. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை இப்பொழுதே எடுத்து விடுங்கள். 3). அந்த அந்த பகுதியில் உள்ள வேளாண்மை சார்ந்த அதிகாரிகள் மக்களிடம் இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 4) பெரும்பாலான தமிழக ஊடகங்கள் இதை மக்களிடம் எடுத்து சொல்வதில்லை. பிரதமர் நல்ல பெயர் வாங்கிவடுவாரோ என்ற நல்ல எண்ணத்தில் தான். நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X