நீதிபதிகள் பற்றி விமர்சனம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வருத்தம்

Added : நவ 10, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : சமூக வலைதளங்களில் நீதிபதிகளை விமர்சித்து கருத்துக்கள் பதிவிடுவது அதிகரித்துள்ளதற்கு, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கவலை தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த சட்டசேவைகள் தின விழாவில், அவர் பேசியதாவது: நீதிபதிகள் என்ன செய்கின்றனர் என்பது நமக்கு தெரியும், ஆனால், அவர்களின் வாழ்க்கை பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அவர்கள் எவ்வளவு
Union law minister, Kiren Rijiju, judges

புதுடில்லி : சமூக வலைதளங்களில் நீதிபதிகளை விமர்சித்து கருத்துக்கள் பதிவிடுவது அதிகரித்துள்ளதற்கு, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கவலை தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த சட்டசேவைகள் தின விழாவில், அவர் பேசியதாவது: நீதிபதிகள் என்ன செய்கின்றனர் என்பது நமக்கு தெரியும், ஆனால், அவர்களின் வாழ்க்கை பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அவர்கள் எவ்வளவு கடுமையாக பணியாற்றுகின்றனர் என்பதை, நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.


latest tamil newsபொது வாழ்வில் இருக்கும் நாங்கள், எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம். ஆனால், நீதிபதிகளால் அப்படி வாழ முடியாது. நீதிபதிகளை விமர்சித்து, சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடுவது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது நல்லதல்ல. நாட்டின் நீதித்துறையை நாமே அவமதிக்க கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
10-நவ-202118:01:11 IST Report Abuse
Sandru பல சமயம் இவர்கள் எல்லையை தாண்டி விடுகிறார்கள்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
10-நவ-202117:56:00 IST Report Abuse
RajanRajan ஒரு குற்றம் அரங்கேறிவிட்டது என்றால் அங்கு என்ன ரகசியம்? என்ன வகை குற்றம் என்பது குற்றம் செய்தவனுக்கு தெரியும் மறுக்க முடியாது. அடுத்து அந்த குற்றத்தின் உண்மை நிலை என்ன என்பது அந்த வக்கீல் மகானுக்கு தெரியும் வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. குற்றவாளியும் வக்கிலும் வழக்க வாதிடுகிறார்கள். அப்போ நிலைமை என்ன? THE JUDJ IS UNDER TRAIL IN DEEP SILANCE. ஜுட்ஜ் சாட்சி எங்கே என்று தேடுகிறார் தேடி தேடி அழைக்கிறார் அந்த டபுள் ஜி கேஸுலே பலவருடங்கள் போராடுறாரு ஜுட்ஜ். கடைசில என்ன நயம் குற்றவாளிகள் விடுதலை என கோர்ட் முன்னாலே பட்டாசு வெடிக்க வச்சுட்டு போய்ட்டாரு ஜுட்ஜ் சாமி. கடைசில மக்கள் கண்டது என்ன குற்றவாளிகளை ஜுட்ஜ் சாமி தீபாவளி கொண்டாட வச்சுட்டுன்னு தலையிலே அடிச்சுகிட்டு போவுறான் ஒட்டு போட. அங்கே என்னடான்ன அதே குற்றவாளி ஓட்டுக்கு பண பட்டுவாடா பண்ணுறான். எப்படி ஜனநாயகம் தழைக்குமாம்.??? விந்தை உலகமடா.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
10-நவ-202117:42:49 IST Report Abuse
RajanRajan நீங்க சொல்லுற மாதிரி தான் இருக்கோணும்னு நாங்க இத்தனை வருசமா முயற்சித்தோம். ஆனால் நிலம அப்படி உருவாகவில்லையே? ஏன் ? ஒரு வழக்கிலே தீர்ப்பு வழங்க 25 வருஷமாவுது. இப்படி ஒவ்வொரு கேசும் சில்வர் ஜூபிளி கொண்டாடிகிட்டு இருந்தா எப்படி? குற்றங்களால் பாதிக்க பட்டவர்கள் நீதியால் நிரபராதி என்றாலும் தண்டிக்க பட்டு விடுகிறார்களே. என்ன ஒரு அவலமாடோ. அன்று நிர்பயா கொலை வழக்கிலே தூக்கு தண்டனையை நிறைவேற்ற இந்த நீதிமன்றம் பட்ட பாடு இருக்குதே சிரிப்பை அடக்க முடியல்லே. இத்தனை வருடங்கள் இங்கத்தை சட்டம் ஒன்றை தான் நீதிமன்றங்களால் பாதுகாக்க முடிந்ததே தவிர பாமரன் நீதி கேட்டு கோர்ட் படி ஏறினால் தொலைந்தான் அத்தோட திவாலாகிவிடுவானே. இது தானே இங்கே கிடைத்த அனுபவம். சட்ட கட்டமைப்பை மாற்றுங்கள் சாமிகளா. குற்றவாளிக்கு சட்டத்தை கண்டு சிங்கப்பூர் போலீஸ் பயம் வர வேண்டும். ஒருத்தனை பாரு, சிபிஐ அவனை கைது பண்ண அவன் வூட்டு மதில் ஏறி குதிக்க வேண்டிய நிலாமையிலே சட்டம் உள்ளது. பொதுவா திருடன் தான் மதிலேறி குதிச்சு ஓடுவான். ஆனால் இங்கே போலீஸ் மதில் ஏறி குதிச்சு கைது பண்ணுற நிலைமையே உள்ளது. வாயிதா ஜாமீன் என்றே வழக்கை விசாரிச்சு தீர்ப்பு வழங்காமலே எத்தனை நீதிபதிகள் ஒய்வு பெற்றுள்ளார்கள் என்பதை அவுங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளவும். ஏன் இந்த நிலைப்பாடு. மிக பெரிய உதாரணம் அந்த குமாரசாமி கால்குலேட்டர் தீர்ப்பு தான். இதை புரிந்த ஒரு பாமரன் விமரிசிக்காமல் வாய் முடி இருக்கோணும்னு நீங்க ஆசை படுறதுக்கு ஏன் இந்த ஜனநாயகம். மில்லியன் டாலர் கேள்வி. எல்லா அரசியல்வாதிகளும் என்ன தகிரியமா வலக்கை எதிர் கொள்வோம் சட்டம் தன கடமையை செய்யும் என வீர முழக்கம் பண்ணி கோடி கணக்கிலே மக்கள் பணத்தை சூறையாடி விடுறானுங்க. சட்டம் கண் மூடி கொண்டிருக்கிறது. ஏன்.? கோர்ட்டுக்கும் மக்களுக்கும் இடையே இமாலய இடைவெளி எப்படி பாலம் கட்ட போவுறீங்களோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X