நெல் பயிர் காப்பீடு: 15ம் தேதி கடைசி நாள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல் பயிர் காப்பீடு: 15ம் தேதி கடைசி நாள்

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021
Share
சென்னை : 'பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள், வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்' என, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.6.91 லட்சம் ஏக்கர்அவரது செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை, முழு வீச்சில்

சென்னை : 'பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள், வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்' என, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.



latest tamil news



6.91 லட்சம் ஏக்கர்


அவரது செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை, முழு வீச்சில் காப்பீடு செய்து வருகின்றனர்.இதுவரை, 5.65 லட்சம் விவசாயிகள் பதிவு செய்து, 6.91 லட்சம் ஏக்கர் பயிர் பரப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார். திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், சிவகங்கை, கடலுார், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில், சம்பா பருவத்தில், நெல் பயிரை காப்பீடு செய்வதற்கு 15ம் தேதி கடைசி நாள்.கன்னியாகுமரி, அரியலுார், திண்டுக்கல், விருது நகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை, டிச., 15 கடைசி நாள்.


latest tamil news


வடகிழக்கு பருவ மழையால் நெல் பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது.எனவே, இத்திட்டத்தின் கீழ், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் வழியாக உடனடியாக பதிவு செய்யவும்.விதைப்பு அறிக்கைபதிவு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், வி.ஏ.ஓ., வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன், பயிர் காப்பீட்டு தொகையில், 15 சதவீத தொகையை, விவசாயிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.

இதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.எனவே, விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல், முன்னதாகவே தங்கள் நெற்பயிரை காப்பீடு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலரை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X