கால்நடைகள் சுற்றினால் உரிமையாளருக்கு அபராதம்| Dinamalar

கால்நடைகள் சுற்றினால் உரிமையாளருக்கு அபராதம்

Added : நவ 10, 2021
Share
செங்கல்பட்டு : சாலையில், கால்நடைகள் சுற்றித் திரிந்தால், உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என, கலெக்டர் ராகுல்நாத், தெரிவித்தார்.செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட செய்திகுறிப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான ஆடுகள், மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்,

செங்கல்பட்டு : சாலையில், கால்நடைகள் சுற்றித் திரிந்தால், உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என, கலெக்டர் ராகுல்நாத், தெரிவித்தார்.செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட செய்திகுறிப்பு:

செங்கல்பட்டு மாவட்டத்தில், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான ஆடுகள், மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், விபத்துகளில் சிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.விவசாய நிலங்களில், நெல் உள்ளிட்ட பயிர் வகைளை சுற்றித் திரியும், ஆடு, மாடுகள் நாசப்படுத்துகின்றன.

எனவே, மாட்டின் உரிமையாளர்கள், வரும் 15ம் தேதிக்குள், தங்களுக்கு சொந்தமான இடங்களில், பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன் பின், ஆடு, மாடுகள் சுற்றித் திரிந்தால், பிடித்து வைத்து, மாட்டின் உரிமையாளர்களுக்கு, அபராதம் விதிக்கப்படும். எனவே, தங்கள் கட்டுப்பாட்டுடன், கால்நடைகளை பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X