பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் அருகே  மழை நீரில் மூழ்கிய 100 ஏக்கர் நெற்பயிர்கள்

Added : நவ 10, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை, திருப்புல்லாணி, நயினார் கோவில் ரோடு, காருகுடி உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கருக்கும் அதிகமான இடங்களில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நாள் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வயல்வெளிகளில் நீர் தேங்கி உள்ளது.சக்கரக்கோட்டை கண்மாய் நீர்பாசன பகுதிகளில் உள்ள

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை, திருப்புல்லாணி, நயினார் கோவில் ரோடு, காருகுடி உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கருக்கும் அதிகமான இடங்களில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நாள் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வயல்வெளிகளில் நீர் தேங்கி உள்ளது.சக்கரக்கோட்டை கண்மாய் நீர்பாசன பகுதிகளில் உள்ள பல ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதே போல் திருப்புல்லாணி செல்லும்கிழக்கு கடற்கரை சாலையில் ஆர்.எஸ்.மடை அருகே இருந்து சாலையின் இருபுறமும் மழை நீர் பெருக்கெடுத்து பாய்கிறது.இதனால் அருகில் உள்ள நெல் வயல்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காருகுடி பகுதியிலும் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. மழை நீர் வடிவதற்கான வசதி இல்லாததால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X