பொது செய்தி

தமிழ்நாடு

அடையாறு துவங்கும் இடத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கை; அமைச்சர்கள் ஆய்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
படப்பை : அடையாறு ஆறு துவங்கும் இடத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர்கள், அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே, ஆதனுாரில் அடையாறு கால்வாய் துவங்கி, சென்னை பட்டினப்பாக்கத்தில் கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் வடக்கிழக்கு பருவமழை காரணமாக அடையாற்றில் ஏற்படும் வெள்ளபெருக்கால், வரதராஜபும், முடிச்சூர், உள்ளிட்ட பல்வேறு

படப்பை : அடையாறு ஆறு துவங்கும் இடத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர்கள், அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே, ஆதனுாரில் அடையாறு கால்வாய் துவங்கி, சென்னை பட்டினப்பாக்கத்தில் கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் வடக்கிழக்கு பருவமழை காரணமாக அடையாற்றில் ஏற்படும் வெள்ளபெருக்கால், வரதராஜபும், முடிச்சூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வெள்ள நீர் சூழ்கிறது. வெள்ள நீர் விரைவாக வெளியேற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளை ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் பெரியகருப்பன், ஊரக தொழிற்துறை அமைச்சர் அன்பரசன்.ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அமுதா, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டி:கடந்த கால மழை நிகழ்வுகளை முன் அனுபவமிக்க வைத்து. இந்தாண்டு பெருமழையில் பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரக வளர்ச்சி துறை சார்பில், 7 கோடி ரூபாய் மதிப்பிலும், நீர்வளத்துறை சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பில், அடையாறு மற்றும் சிறு ஆறுகளை சீரமைக்கும் பணிகள் சிறப்பாக நடந்தன. வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் கடந்த கால வெள்ள பாதிப்புக்கள் தற்போது ஏற்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X