அரசியல் செய்தி

தமிழ்நாடு

அணையை வைத்து அரசியலா? துரைமுருகன் பாய்ச்சல்

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (74)
Share
Advertisement
சென்னை : ''அரசியல் விளம்பரத்துக்காக, முல்லைப் பெரியாறு அணை திறப்பு தொடர்பாக ஏதாவது கூறுகின்றனர்,'' என நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: முல்லைப் பெரியாறு அணையை திறக்க, எதற்காக கேரள அமைச்சர்கள் வந்தனர்; தண்ணீரை யார் திறந்தது என்று கேட்கின்றனர். முல்லைப் பெரியாறு அணையில் எந்தெந்த தேதிகளில், எவ்வளவு தண்ணீர் நிறுத்த வேண்டும் என்று,
DMK, Durai Murugan, Mullai Periyar Dam

சென்னை : ''அரசியல் விளம்பரத்துக்காக, முல்லைப் பெரியாறு அணை திறப்பு தொடர்பாக ஏதாவது கூறுகின்றனர்,'' என நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: முல்லைப் பெரியாறு அணையை திறக்க, எதற்காக கேரள அமைச்சர்கள் வந்தனர்; தண்ணீரை யார் திறந்தது என்று கேட்கின்றனர். முல்லைப் பெரியாறு அணையில் எந்தெந்த தேதிகளில், எவ்வளவு தண்ணீர் நிறுத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், மத்திய நீர்வள ஆணையம், நீர்மட்ட அளவுகளை நிர்ணயம் செய்துள்ளது.

ஒவ்வொரு அணைக்கும், பத்து நாட்கள் இடைவெளியில், எவ்வளவு தண்ணீர் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அக்., 29ம் தேதி தமிழக அதிகாரிகளால் அணை மதகு திறக்கப்பட்டது.அணை திறப்பு குறித்து கேரளாவுக்கு சொன்னோம். அன்று எதிர்பாராதவிதமாக அமைச்சர்கள் வந்துள்ளனர். தண்ணீர் திறந்தது, 29ம் தேதி. அன்று 138 அடி தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால், 138.75 அடி தண்ணீர் இருந்தது. எனவே, கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


latest tamil news



இது உச்ச நீதிமன்ற ஆணையின்படி, சமீபத்தில் வந்த உத்தரவு; பழமைவாதிகளுக்கு இது தெரியாது. நாங்கள் யாரையும் கேட்காமல், தண்ணீர் திறந்ததாக ஒப்பாரி வைக்கின்றனர். சட்டப்படியே தண்ணீரை திறந்துள்ளோம்.கேரள வனத்துறை துணை இயக்குனர் சுனில்பாபு, 6ம் தேதி முல்லைப் பெரியாறு அணை செயற்பொறியாளருக்கு கடிதம் அனுப்பினார். அதில், பேபி அணையில் 15 மரங்களை வெட்ட அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

கேரள வனத்துறை முதன்மை வனப் பாதுகாவலர் பெஞ்சமின் தாமஸ், இதற்கான உத்தரவை வழங்கி உள்ளார். எந்தெந்த மரங்களை வெட்ட வேண்டும் என்று, அதன் பெயர் பட்டியலையும் இணைத்திருந்தனர். இதை முதல்வரிடம் தெரிவித்தோம். முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார். தற்போது, கேரள வனத்துறை அமைச்சர் சசிதரன், எங்களுக்கு தெரியாது என்கிறார். இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையில், அமைச்சருக்கு தெரியாமல், எப்படி தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி கடிதம் எழுதுவார்?

அமைச்சர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. அது அவர்கள் சமாசாரம். நாங்கள் நல்லெண்ணத்தில் முதல்வருக்கு கடிதம் எழுதினோம். இதை புரிந்து கொள்ளாமல், இங்கு எதற்கெடுத்தாலும் அரசியல் செய்ய நினைக்கின்றனர்.பா.ஜ., சார்பில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அணையில் 142 அடி தண்ணீர் தேக்க வேண்டும் என்கின்றனர். விதிகளின்படி, நவ., 30ம் தேதி 142 அடி தண்ணீர் தேக்கப்படும்.

'ஸ்டாலின் மேயராக இருந்தும், சென்னைக்கு எதுவும் செய்யவில்லை' என்கின்றனர். அவர் மேயராக இருந்தபோது தான், அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள் போடப்பட்டன; மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இது, நீண்ட கால அரசியலில் இருப்பவர்களுக்கு தெரியும். இடைக்காலத்தில் வந்தவர்களுக்கு தெரியாது.

பன்னீர்செல்வம், 14 முறை முல்லைப் பெரியாறு அணைக்கு சென்றதாக கூறினார்; தேதி கேட்டேன். ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அது சுற்றுலா சென்றது போல உள்ளது. அரசியலில் விளம்பரத்துக்காக, ஏதாவது செய்கின்றனர். வானிலையை நம்பி தண்ணீரை திறந்துள்ளோம். வானிலை பொய்த்து விட்டால் நிலைமை சிக்கலாகி விடும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kutti Ravi - coimbatore,ரூவான்டா
10-நவ-202120:52:59 IST Report Abuse
Kutti Ravi அப்புறம் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாம அவியலா செய்வாங்க
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
10-நவ-202120:23:18 IST Report Abuse
Ramesh Sargam இறந்த உடலை வைத்து அரசியல் செய்யும் கழகங்கள், அணையை வைத்து செய்யாதா...???
Rate this:
Cancel
10-நவ-202118:07:47 IST Report Abuse
சம்பத் குமார் 1). பொறுப்பான ஒரு சீனியர் அமைச்சரின்‌ பேச்சு இதுவல்ல. முடியவில்லை எனில் அமைச்சர் பொறுப்பை விடுத்து கட்சி வேலையை மட்டும் துரைமுருகன் அவர்கள் செய்யலாம். வயது ஆகி விட்டது.‌ஒய்வு எடுக்கலாம்.2). கலைஞர் ஜெயலலிதா போன்றவர்கள் எதற்காக உங்களை போன்றோரை வாய் திறக்க விடாமல் வைத்து இருந்தார்கள் என்பது இப்பொழுது தான் தெரிகிறது.3).நீங்க எதிர் கட்சியாக இருந்த பொழுது அரசியல் செய்யவில்லையா??? தினசரி அறிக்கை விடவில்லையா?நீட் அரசியல் செய்யவில்லையா?.தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசியல் செய்யவில்லையா???4). கேரளா அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் புது அணை கட்ட வழக்கு போட்டு உள்ளார்கள்.5). ஜந்து ஆறு மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சினை.6). எல்லாவற்றுக்கும் மேலாக இது தற்பொழுது தமிழ்நாட்டின் பிரச்சினை. கொளவர பிரச்சினை.7). நாம் என்ன கேரளாவிலா இருக்கிறோம். ஒரு நதி போனால் ஓராயிரம் நதி உள்ளது என விட்டுவிட.8).சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 10 மாவட்டங்கள் மட்டுமே தமிழ்நாடு என திராவிட கட்சிகள் நினைப்பதால் இந்த பிரச்சினை.9). எல்லா தொழிற்சாலைகளையும் சென்னை சுற்றி உள்ளது.10). எங்களுக்கு விவசாயமே முக்கியத் தொழில். அதைவிட்டால் சோற்றுக்கு என்ன பண்ணுவது. பொறுப்பான அமைச்சராக பேசுங்கள் மற்றும் செயல்படுங்கள். 11).. எதிர் கட்சியாக இருந்த போது கேள்வி கேட்பது எளிது தற்பொழுது ஆட்சியில் செயல்படுவது வேறு. நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X