சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கால்வாய் பிரச்னை: ஈச்சங்காடு மக்கள் உண்ணாவிரதம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
திருப்போரூர் : கால்வாய் தோண்டிய விவகார பிரச்னையில் எதிர்தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.திருப்போரூர் அடுத்த, இள்ளலுார் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சங்காடு பள்ளிகூட தெருவில் மழை நீரை வெளியேற்ற, அப்பகுதி வார்டு உறுப்பினர், கடந்த 5ம் தேதி வடிகால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டார்.இதற்கு, அதே தெருவில் வசிக்கும் லோகநாயகி, ஜெயலட்சுமி

திருப்போரூர் : கால்வாய் தோண்டிய விவகார பிரச்னையில் எதிர்தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

திருப்போரூர் அடுத்த, இள்ளலுார் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சங்காடு பள்ளிகூட தெருவில் மழை நீரை வெளியேற்ற, அப்பகுதி வார்டு உறுப்பினர், கடந்த 5ம் தேதி வடிகால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டார்.இதற்கு, அதே தெருவில் வசிக்கும் லோகநாயகி, ஜெயலட்சுமி தங்களது வீட்டையொட்டி அதிக ஆழம் தோண்டுவதாக எதிர்ப்பு தெரிவித்து திருப்போரூர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், லோகநாயகி தரப்பினரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. அது தொடர்பான புகாரில் அதே பகுதியை சேர்ந்த ஆறு பேர் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர் என வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனால், கடந்த 6ல் ஒரு தரப்பு புகாரை பெற்று வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், வெளியூர் நபர் காரில் வந்து மிரட்டியதாகவும் கூறி அப்பகுதி மக்கள் திருப்போரூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.அதற்கு திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லில்லி எதிர்தரப்பினர் மீதும் புகார் அளித்தால், விசாரித்து வழக்கு பதிவு செய்கிறோம் என கூறியதால்,மக்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று, காலை 10:00 மணிக்கு, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி 40க்கும் மேற்பட்டோர், திருப்போரூர் - இள்ளலுார் சாலையில் உள்ள ஈச்சங்காடு பஸ் நிறுத்தத்தின் உள்ளே அமர்ந்து அமைதியாக உண்ணாவிரத போராட்டம் செய்தனர்.மாமல்லபுரம் டி.எஸ்.பி., ஜகதீஸ்வரன், திருப்போரூர் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தினர். அதற்கு மக்கள் புகார் கொடுத்து இதுவரை எதிர்தரப்பினர் மீது வழக்கு பதியவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் அதிகமானதால், அங்கிருந்த ஆண்கள் நான்கு பேரை போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால், சில பெண்கள் சாலையில் அழுது வேதனையை தெரிவித்தனர்.கடைசியில், போலீசார் எதிர்தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்வதாகவும், போலீஸ் நிலையம் அழைத்து சென்ற நான்கு பேரை அனுப்பி விடுவதாகவும் கூறியதால் பெண்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X