'மதுராந்தகம் ஏரி உபரி நீரால்

Added : நவ 10, 2021
Advertisement
மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரி நிலவரம் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நேற்று நிலவரப்படி, ஏரியில் 24 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதன் முழு கொள்ளளவான 0.694 டி.எம்.சி.,
 'மதுராந்தகம் ஏரி உபரி நீரால்

மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரி நிலவரம் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று நிலவரப்படி, ஏரியில் 24 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதன் முழு கொள்ளளவான 0.694 டி.எம்.சி., தண்ணீரை தாண்டி, 0.720 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பி உள்ளது.ஏரிக்கான நீர் வரத்தான 2,000 கன அடி தண்ணீர், அப்படியே உபரி நீராக கலங்கல் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால், கிளியாற்றின் கரையோரமுள்ள வளர்பிறை, முள்ளி, தோட்ட நாவல், ஈசூர், விழுதமங்கலம் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஏரிக்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு, உபரி நீர் வெளியேறும் கரையோர பகுதிகளில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ செல்லக்கூடாது என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மாவட்டத்தின் பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று மதுராந்தகம் ஏரியை ஆய்வு செய்தனர்.பேரிடர் மீட்பு கண்காணிப்பு அலுவலர் சம்பந்தமூர்த்தி கூறியதாவது:மதுராந்தகம் ஏரி முழுமையாக நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், ஏரி நீரால் மக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என நம்புகிறோம்.செங்கல்பட்டு மாவட்டம் முழுதும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக 200 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X