பொது செய்தி

இந்தியா

மேம்பாலத்தின் மீது இருந்து மீன்பிடிக்கும் பொதுமக்கள்

Added : நவ 10, 2021
Share
Advertisement
திருக்கனுார் : சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கூனிச்சம்பட்டு - மணலிப்பட்டு இடையே உள்ள மேம்பாலத்தின் மீது இருந்து பொது மக்கள் மீன் பிடித்து வருகின்றனர்.திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு - கூனிச்சம்பட்டு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலத்துடன் கூடிய படுகை அணை அமைக்கப்பட்டுள்ளது.தொடர் மழையின் காரணமாக வீடூர் அணை திறக்கப்பட்டுள்ளதால்,

திருக்கனுார் : சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கூனிச்சம்பட்டு - மணலிப்பட்டு இடையே உள்ள மேம்பாலத்தின் மீது இருந்து பொது மக்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு - கூனிச்சம்பட்டு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலத்துடன் கூடிய படுகை அணை அமைக்கப்பட்டுள்ளது.தொடர் மழையின் காரணமாக வீடூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், இந்த படுகை அணை தற்போது நிரம்பி வழிகிறது.இதனால், சங்கராபரணி ஆற்றில் மீன்களின் வரத்து அதிகரித்து உள்ளது. தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளதால், ஆற்றில் யாரும் இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மேம்பாலத்தின் மேல் இருந்து கயிறு மூலம் 50 அடி கீழே படுகையணையின் மீது வலைகளை தொங்கவிட்டு மீன்களை பிடித்து வருகின்றனர்.அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வலைகளில் மீன்களும் அதிக அளவில் சிக்குகின்றன.50 அடி உயரத்தில் இருந்து ஆபத்தை உணராமல் பொது மக்கள் மீன்கள் பிடித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X