இந்தியா

முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா

Added : நவ 10, 2021
Share
Advertisement
வில்லியனுார் : வில்லியனுார் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடந்தது.வில்லியனுார் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கே உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து காலை 6 மணிக்கு துவங்கிய சஷ்டி கவச பாராயணம் தொடர்ந்து 36 முறை நடந்தது.இரவு 7 மணிக்கு சூரசம்ஹார விழா நடந்தது. 7. 30 மணிக்கு
 முருகன் கோவில்களில்  சூரசம்ஹார விழா

வில்லியனுார் : வில்லியனுார் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடந்தது.வில்லியனுார் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கே உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து காலை 6 மணிக்கு துவங்கிய சஷ்டி கவச பாராயணம் தொடர்ந்து 36 முறை நடந்தது.இரவு 7 மணிக்கு சூரசம்ஹார விழா நடந்தது.

7. 30 மணிக்கு மேல் வேலுக்கு சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் குருக்கள் பாலசுப்ரமணியன் தலைமையில் அறங்காவலர் குழுவினர் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.கரிக்கலாம்பாக்கம் வள்ளி தேவசேனா சமேத குமரேஸ்வரர் தேவஸ்தானத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வந்தது.நேற்று நடந்த சூரசம்ஹார விழாவில் மாலை 6 மணியளவில் குமரேச பெருமாள் விசாலாட்சி அம்மனிடம் இருந்து வேல் வாங்கும் வைபவம் நடந்தது. விழாவில் கரிக்கலாம்பாக்கம், செல்லஞ்சேரி, கீழ்குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X