திருக்கழுக்குன்றத்தில் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்| Dinamalar

தமிழ்நாடு

திருக்கழுக்குன்றத்தில் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்

Added : நவ 10, 2021 | கருத்துகள் (1)
Share
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதியில், கன மழையால் நெற்பயிர் நீரில் மூழ்கின.செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதி, நெல் சாகுபடிக்கு சிறந்து விளங்குகிறது. பாலாற்று நீராதார பகுதிகளில் மூன்று போகம், பிற பகுதிகளில் ஒரு போகம் என, நெல் விளைவிக்கப்படுகிறது.தை மாத அறுவடைக்காக, விவசாயிகள் பாப்பட்லா உள்ளிட்ட நெல் ரகங்கள்
 திருக்கழுக்குன்றத்தில் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதியில், கன மழையால் நெற்பயிர் நீரில் மூழ்கின.செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதி, நெல் சாகுபடிக்கு சிறந்து விளங்குகிறது.

பாலாற்று நீராதார பகுதிகளில் மூன்று போகம், பிற பகுதிகளில் ஒரு போகம் என, நெல் விளைவிக்கப்படுகிறது.தை மாத அறுவடைக்காக, விவசாயிகள் பாப்பட்லா உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிட்டுள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை, சில நாட்களாக பெய்யும் நிலையில், இரும்புலிச்சேரி - அட்டவட்டம் உள்ளிட்ட பகுதியில், நெற்பயிர் நீரில் மூழ்கியது. இதனால், பயிரிடப்பட்ட பல ஏக்கர் பரப்பு வயல்களில் மழை நீர் தேங்கி, நெற்பயிர் மூழ்கி, விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X