கபடி வீராங்கனைக்கு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கபடி வீராங்கனைக்கு

Added : நவ 10, 2021
Share
விருத்தாசலம் : சர்வதேச பெண்கள் கபடி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவிக்கு, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வாழ்த்தினார்.நேபாளம், காத்மாண்டில் நடந்த சர்வதேச பெண்கள் கபடி போட்டியில், இந்திய பெண்கள் அணியினர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இப்போட்டியில் தமிழக மாணவிகள் ஐந்து பேர் பங்கேற்றனர்.அதில், ராமநத்தம் அடுத்த கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த வேலு
 கபடி வீராங்கனைக்கு

விருத்தாசலம் : சர்வதேச பெண்கள் கபடி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவிக்கு, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

நேபாளம், காத்மாண்டில் நடந்த சர்வதேச பெண்கள் கபடி போட்டியில், இந்திய பெண்கள் அணியினர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இப்போட்டியில் தமிழக மாணவிகள் ஐந்து பேர் பங்கேற்றனர்.அதில், ராமநத்தம் அடுத்த கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த வேலு மகள் மீனாட்சி, அணி கேப்டனாக பொறுப்பேற்று விளையாடினார்.

சொந்த ஊர் திரும்பிய அவருக்கு அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வாழ்த்தினார். பயிற்சி, பயணம் உள்ளிட்ட தேவைகளுக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்தார். திட்டக்குடி நகர செயலாளர் நீதிமன்னன், பரமசிவம், தந்தை வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X