பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை எதிரொலி படகுகள் நிறுத்தம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : தொடர் கன மழையால் பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் படகில் கடலுக்கு சென்று, மீன் பிடித்து அன்னங்கோவில் மற்றும் கிள்ளை முடசல் ஓடை மீன் இறங்தளத்திற்கு கொண்டு வந்து கேரளா, ஆந்திரா

பரங்கிப்பேட்டை : தொடர் கன மழையால் பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் படகில் கடலுக்கு சென்று, மீன் பிடித்து அன்னங்கோவில் மற்றும் கிள்ளை முடசல் ஓடை மீன் இறங்தளத்திற்கு கொண்டு வந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோர பகுதியில் 5 நாட்களாக கன மழையுடன் காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.விசைப்படகுகள், மோட்டார் படகுகளை, கிள்ளை முடசல் ஓடை மீன் இறங்குதளம் மற்றும் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில், பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X