இந்தியா

வாய்க்கால் துார்வார அமைச்சர் ஆய்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதியில் வாய்க்கால் துார் வாருவது தொடர்பாக அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார்.காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட ஆலங்குப்பம், கணபதி செட்டிக்குளம், காலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏரி, குளங்களுக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்கால் துார்வாரப்படாமல் உள்ளது. .தொடர் மழையின் காரணமாக மழைநீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதியில் வாய்க்கால் துார் வாருவது தொடர்பாக அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார்.காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட ஆலங்குப்பம், கணபதி செட்டிக்குளம், காலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏரி, குளங்களுக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்கால் துார்வாரப்படாமல் உள்ளது. .

தொடர் மழையின் காரணமாக மழைநீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் ஆகியோர் நேற்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, ஏரி, குளங்களுக்கு செல்லும் நீர் வரத்து வாய்க்கால்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற் பொறியாளர்கள் சாய் சுப்பிரமணியம், பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X