கடலுார் : கடலுார் மாவட்ட கோர்ட் வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.கடலுார் மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நேற்று கடலுார் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்து புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர், சட்டம் குறித்த விழிப்புணவு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில் குடும்ப நல கோர்ட் நீதிபதி புவனேஸ்வரி, தொழிலாளர் கோர்ட் சுபா அன்புமணி, மகிளா கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார், எஸ்.சி. எஸ்.டி., கோர்ட் மாவட்ட நீதிபதி உத்தமராஜ், போக்சோ கோர்ட் நீதிபதி எழிலரசி, தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, சிவராஜ், சம்பத்குமார், வனராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சப் கோர்ட் நீதிபதியுமான பாக்கியம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE