பொது செய்தி

இந்தியா

மழை நிவாரணம் வழங்க

Added : நவ 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதை அரசு மறு பரிசீலனை

புதுச்சேரி : தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:

புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.தனியார் பள்ளியில் படிக்கும் அட்டவணை இன மாணவர்களுக்கு அரசு வழங்குவதாக அறிவித்த கல்விக் கட்டணத்தை இதுவரை செலுத்தாததால், பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி பெற்றுள்ளனர்.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால், நகரப் பகுதி முழுதும் பிரதான சாலைகள் சேதமடைந்து உள்ளதற்கு, முந்தைய காங்., - தி.மு.க., கூட்டணி அரசே காரணம்.சாலைப் பணியில் முறைகேடு செய்த கான்ட்ராக்டர், அரசு மேற்பார்வையாளர்கள், பொறியாளர்கள் மீது உரிய நடவடிக்கை அரசு எடுக்காததே முறைகேடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.உப்பளம் தொகுதியில் அம்பேத்கர் சாலை, புஸ்ஸி வீதி, திப்புராயபேட்டை, பிரதான மெயின் ரோடு, முதலியார் பேட்டை - கடலுார் சாலை ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்.

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அரசு 5,000 ரூபாய் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X