இந்தியா

பத்துக்கண்ணுவில் 89 மி.மீ., மழை 38 ஏரிகள் நிரம்பி வழிகிறது

Added : நவ 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி, : புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையில், நேற்று முன்தினம் பத்துக்கண்ணுவில் 89 மி.மீ., மழை பெய்துள்ளது. 38 ஏரிகள், 26 படுகை அணைகள் நிரம்பி வழிகின்றன.புதுச்சேரி பிராந்தியத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது.இந்த ஆண்டில் நேற்று முன்தினம் காலை வரை பிராந்தியத்தில் 1,613

புதுச்சேரி, : புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையில், நேற்று முன்தினம் பத்துக்கண்ணுவில் 89 மி.மீ., மழை பெய்துள்ளது.

38 ஏரிகள், 26 படுகை அணைகள் நிரம்பி வழிகின்றன.புதுச்சேரி பிராந்தியத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது.இந்த ஆண்டில் நேற்று முன்தினம் காலை வரை பிராந்தியத்தில் 1,613 மி.மீ., மழை பெய்துள்ள நிலையில், நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணிவரை பத்துகண்ணுவில் 89 மி.மீ., பாகூர் 64 மி.மீ.,;

புதுச்சேரி 56 மி.மீ., மற்றும் திருக்கனுாரில் 48 மி.மீ., மழை பெய்துள்ளது.நேற்று காலை வரை பிராந்தியத்தில் புதுச்சேரியில் 1,669.4 மி.மீ., பாகூரில் 1,642 மி.மீ., பத்துக்கண்ணுவில் 1,483 மி.மீ., மற்றும் திருக்கனுாரில் 1,180 மி.மீ., மழை பெய்துள்ளது.ஆண்டு சராசரி அளவை விட கூடுதலாக மழை பெய்துள்ளதால் பிராந்தியத்தில் உள்ள 84 ஏரிகளில் 38 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 3.5 மீ., உயரமுள்ள ஊசுடு ஏரி 2.99 மீ., அளவிற்கு மழை நீர் நிரம்பியுள்ளது. அதேபோன்று 3 மீ., உயரமுள்ள பாகூர் ஏரி 2.32 மீ., அளவிற்கு நிரம்பியுள்ளது. ஐந்து ஆறுகளின் குறுக்கே உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X