பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் துணை இயக்குனர் உழவர் சந்தையில் ஆய்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் உழவர் சந்தையில், மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பூங்கோதை மற்றும் கடலுார் விற்பனை குழு செயலர் ரவி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது, உழவர் சந்தை வளாகத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும். வளாகத்தில் மழைநீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர். உழவர் சந்தைக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள், அவற்றின் தரம்
 வேளாண் துணை இயக்குனர்  உழவர் சந்தையில்  ஆய்வு

விருத்தாசலம் : விருத்தாசலம் உழவர் சந்தையில், மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பூங்கோதை மற்றும் கடலுார் விற்பனை குழு செயலர் ரவி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, உழவர் சந்தை வளாகத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும். வளாகத்தில் மழைநீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர். உழவர் சந்தைக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள், அவற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்தினர்.வேளாண்மை அலுவலர்கள் சுகன்யா, சரஸ்வதி, உதவி வேளாண் அலுவலர்கள் பாலசந்திரமூர்த்தி, தனசேகரன் மற்றும் வணிக உதவி வேளாண் அலுவலர்கள் உடனிருந்தனர்.அப்போது, சின்னகண்டியங்குப்பம் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள், குழுவில் முறைகேடு நடப்பதாக, துணை இயக்குனர் பூங்கோதையிடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற துணை இயக்குனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X