இந்தியா

கந்தலானது புதுச்சேரி - கடலூர் சாலை கண்டுகொள்ளுமா அரசு

Added : நவ 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : குண்டும் குழியுமாக இருந்த புதுச்சேரி - கடலுார் சாலை, மழை காரணமாக தற்போது கந்தலாக மாறியுள்ளது.புதுச்சேரி - கடலுார் இடையிலான நெடுஞ்சாலையில், இந்திரா சிக்னலில் இருந்து முள்ளோடை வரையிலான 17 கி.மீ., சாலையை புதுச்சேரி பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது.கடந்த 2 மாதங்களுக்கு முன்பே, மரப்பாலம், அரியாங்குப்பம், நோணாங்குப்பம், பிள்ளையார்குப்பம் பகுதியில் சாலை
 கந்தலானது புதுச்சேரி - கடலூர் சாலை   கண்டுகொள்ளுமா அரசு


புதுச்சேரி : குண்டும் குழியுமாக இருந்த புதுச்சேரி - கடலுார் சாலை, மழை காரணமாக தற்போது கந்தலாக மாறியுள்ளது.புதுச்சேரி - கடலுார் இடையிலான நெடுஞ்சாலையில், இந்திரா சிக்னலில் இருந்து முள்ளோடை வரையிலான 17 கி.மீ., சாலையை புதுச்சேரி பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பே, மரப்பாலம், அரியாங்குப்பம், நோணாங்குப்பம், பிள்ளையார்குப்பம் பகுதியில் சாலை பஞ்சராகி ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி இருந்தது.சாலையை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். சாலை சரிசெய்யப்படவில்லை.தற்போது பருவ மழை துவங்கி, கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால், ஏற்கனவே சாலை பஞ்சராகி சிறிய பள்ளங்களாக இருந்தவை மெகா சைஸ் பள்ளமாக மாறியுள்ளது.மரப்பாலம் சந்திப்பு, அரியாங்குப்பம் புறவழிச்சாலை, நோணாங்குப்பம், இடையார்பாளையம், தவளக்குப்பம் சிக்னல், காட்டுப்பாளையம், மலட்டாறு பாலம் மற்றும் பிள்ளையார்குப்பம் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்கள் தார் சாலை பெயர்ந்தும், பள்ளங்கள் உருவாகி குண்டும் குழியுமாக கிடக்கிறது.கடந்த 10 நாட்களில் கடலுார் சாலையில், 2 இடங்களில் சாலை பள்ளத்தால், மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், பைக்கில் இருந்து தவறி விழுந்து, கார் மோதியதில் உயிரிழந்துள்ளனர்.

வரும் காலத்தில் மேலும் பல விபத்துக்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.எனவே, உயிரிழப்புகளை தடுக்க கந்தலாகி கிடக்கும் கடலுார் சாலையில் உள்ள பள்ளங்களை, மூடி சரிசெய்ய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை ஓய்ந்த பின்பு, தரமான சாலை அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X