தமிழ்நாடு

மழைநீர் அகற்றும் பணி: கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
கடலுார் : கனமழை காரணமாக மழைநீர் அகற்றுதல் மற்றும் துாய்மை பணிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.கடலுார் டவுன்ஹாலில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் 9 குழுக்களை கொண்டு மழைநீர் அகற்றும்பணி மற்றும் துாய்மை பணிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.பின், வில்வநகரில்
 மழைநீர் அகற்றும் பணி: கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு

கடலுார் : கனமழை காரணமாக மழைநீர் அகற்றுதல் மற்றும் துாய்மை பணிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.கடலுார் டவுன்ஹாலில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் 9 குழுக்களை கொண்டு மழைநீர் அகற்றும்பணி மற்றும் துாய்மை பணிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.

பின், வில்வநகரில் உள்ள பெருமாள் குட்டையில் இருந்து வழிந்தோடும் தண்ணீரால் குடியிருப்பு பகுதிகள் பாதிக்காமல் இருக்க மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி, காமராஜ் நகரில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதை பார்வையிட்டனர்.பின், கலெக்டர் அளித்த பேட்டி:மாநகராட்சியில் 10 ஜே.சி.பி இயந்திரங்கள் வழங்கி, 9 குழுக்களாக 45 பேர், 45 வார்டுகளிலும் மழை நீரை வெளியேற்றுதல் மற்றும் துாய்மை பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. கடலோரம் மற்றும் ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து நீர்தேக்கங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இது வரை எந்த பாதிப்பும் இல்லை. பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 228 ஏரிகளில் 75 முழுவதுமாக நிரம்பியுள்ளன. 164 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளன. பாதுகாப்பு கருதி வீராணம் ஏரி, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரியில் இருந்து குறைந்த தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.கடலுார் மாவட்டத்தில் 278 பாதிக்கப்படும் பகுதிகள் கண்டறிந்து கிராம அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல்நோக்கு மையங்கள், புயல் பாதுகாப்பு மையங்கள், தற்காலிக தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X