பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் அமைச்சர் ஆய்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு, வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் மாவட்ட கணிப்பாய்வு மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ராமேஸ்வரம் வந்தார். கலெக்டர் சங்கர்லால் குமாவத் வரவேற்றார். ராமேஸ்வரம் நகராட்சி வெள்ளதடுப்பு பாதுகாப்பு

ராமநாதபுரம் : ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு, வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்ட கணிப்பாய்வு மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ராமேஸ்வரம் வந்தார். கலெக்டர் சங்கர்லால் குமாவத் வரவேற்றார். ராமேஸ்வரம் நகராட்சி வெள்ளதடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வுசெய்தார்.தங்கச்சிமடம், அய்யன்தோப்பு பகுதிகளில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.ராமநாதபுரம் சக்கரகோட்டை கண்மாயை ஆய்வு செய்து நீர் இருப்பு விபரங்களை கேட்டறிந்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளதடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் பாதிக்காத அளவிற்கு முன்னெச்சரிக்கையாக மழைநீர் தேங்கும், நீர்நிலைகளை பார்வையிட்டுள்ளோம். தொடர் மழைபெய்தால் மக்கள், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், போலீசார், மாவட்ட நிர்வாகம், மின்வாரியம்இணைந்து பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சி பாதாளசாக்கடை கழிவுநீர், அரசு மருத்துவக்கல்லுாரிகளில் கழிவுநீர் தேங்கும் பிரச்னைகளுக்கு மழைக்காலத்திற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். எம்.எல்.ஏ.,க்கள் ராமநாதபுரம் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், எஸ்.பி., கார்த்திக் மற்றும் அரசுதுறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X