சம்பவம் செய்தி

தமிழ்நாடு

----பாம்பன் கடலில் குதித்த பெண்: மீனவர்கள் மீட்டனர்

Added : நவ 10, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீனவர்கள் காப்பாற்றினர்.ராமேஸ்வரம் அருகே மண்டபம் மைக்குண்டைச் சேர்ந்த செல்வம் மனைவி தங்கம்மாள் 56, இவரது கணவர் இரு ஆண்டுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். இவரது இரு மகள்களில் ஒருவருக்கு திருமணம் முடிந்த நிலையில், மற்றொரு மகள் காதலித்து திருமணம் செய்துள்ளார்.வேதனையில் இருந்த

ராமேஸ்வரம் : பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீனவர்கள் காப்பாற்றினர்.

ராமேஸ்வரம் அருகே மண்டபம் மைக்குண்டைச் சேர்ந்த செல்வம் மனைவி தங்கம்மாள் 56, இவரது கணவர் இரு ஆண்டுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். இவரது இரு மகள்களில் ஒருவருக்கு திருமணம் முடிந்த நிலையில், மற்றொரு மகள் காதலித்து திருமணம் செய்துள்ளார்.வேதனையில் இருந்த தங்கம்மாள், நேற்று மதியம்பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது பாம்பன் கடற்கரையில் இருந்த மீனவர்கள், படகில் சென்று பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

மரைன் போலீசார் விசாரித்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இலங்கை நபரா: தனுஷ்கோடி ஒத்தபெட்டி கடற்கரையில் அழுகிய நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. உடலை கைப்பற்றிய மரைன் போலீசார் ஆய்வு செய்ததில், வழுக்கை தலை, கரும்ஊதாவில் டிசர்ட் அணிந்துள்ளார்.இலங்கை மன்னாரைசேர்ந்த மீனவர் ஒருவர்கடலில் விழுந்து காணாமல் போனதால், அவர் உடலாக இருக்கலாம்என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X