பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயிலில் சூரசம்ஹாரம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் முருக கடவுள் சூரனை வதம் செய்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.நவ.,4ல் கந்த சஷ்டி விழா துவங்கியதும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேலவாசல் முருகன் சன்னதியில் தினமும் அபிேஷகம், பூஜை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து தரிசனம் செய்தனர். நேற்று சூரசம்ஹாரத்தையொட்டி கோயிலில் இருந்து பல்லக்கில் முருக கடவுள், வள்ளி,

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் முருக கடவுள் சூரனை வதம் செய்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.

நவ.,4ல் கந்த சஷ்டி விழா துவங்கியதும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேலவாசல் முருகன் சன்னதியில் தினமும் அபிேஷகம், பூஜை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து தரிசனம் செய்தனர். நேற்று சூரசம்ஹாரத்தையொட்டி கோயிலில் இருந்து பல்லக்கில் முருக கடவுள், வள்ளி, தெய்வானையுடன் புறப்பாடாகி, கோயில் தெற்கு மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளினார். பின் அங்கிருந்த சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைகோயில் குருக்கள் நடத்தினர். பின் முருகருக்கு மகா தீபாராதனை நடந்ததும், அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X