இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த பாகிஸ்தானுக்கு அதிநவீன போர் கப்பல்; சீனா வழங்கியது

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
பீஜிங் : அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில், பாகிஸ்தானுக்கு அதிநவீன போர் கப்பலை சீனா வழங்கியுள்ளது.கடந்த 2017ல், நம் அண்டை நாடான பாக்., சீனாவிடம் நான்கு போர் கப்பல்களுக்கு 'ஆர்டர்' கொடுத்தது. அதில் முதலாவதாக 'பி.என்.எஸ். துக்ரில்' என்ற போர் கப்பலை, பாக்.,கிற்கு சீனா தற்போது வழங்கியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த

பீஜிங் : அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில், பாகிஸ்தானுக்கு அதிநவீன போர் கப்பலை சீனா வழங்கியுள்ளது.latest tamil news


கடந்த 2017ல், நம் அண்டை நாடான பாக்., சீனாவிடம் நான்கு போர் கப்பல்களுக்கு 'ஆர்டர்' கொடுத்தது. அதில் முதலாவதாக 'பி.என்.எஸ். துக்ரில்' என்ற போர் கப்பலை, பாக்.,கிற்கு சீனா தற்போது வழங்கியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த விழாவில் துக்ரில் போர் கப்பல், பாக்., கடற்படையிடம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாக்., துாதர் மொய்ன் உல் ஹக் கூறியதாவது:சீனாவின் மிகப்பெரிய துக்ரில் கப்பல், பாக்., கடற்படைக்கு வலிமை சேர்க்கும். கடல்சார் சவால்களை எதிர்கொள்ளவும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை பராமரித்து சம வலிமையை நிலை நிறுத்தவும் இந்த கப்பல் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


துக்ரில் கப்பலில் நிலம், வானம், நீர் என அனைத்து வகை தாக்குதல்களையும் பல முனைகளில் இருந்து மேற்கொள்ளும் வசதிகள் உள்ளன. நவீன தற்காப்புத் திறன் சாதனங்களுடன், மின்னணு போர்முறைகளை செயல்படுத்தும் ஆற்றல் உடையது. சீனா, அதன் மிகப்பெரிய அதிநவீன துக்ரில் கப்பலை நட்பு நாடான பாக்.,கிற்கு கொடுத்து, அதன் வாயிலாக அரபிக்கடல், இந்திய பெருங்கடல் ஆகியவற்றில் ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.


'கிராமத்தை உருவாக்குது'


இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையில், சீனா புதிய கிராமத்தை உருவாக்கி வருவதாக, அமெரிக்க ராணுவம் சமீபத்தில் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் 'அது 1959ல் சீனா ஆக்கிரமித்த பகுதி' என, பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்ச்சைக்குரிய இந்த எல்லைப் பகுதியில், சுபன்சிரி மாவட்டத்தில் தான் சீனா மிகப் பெரிய கிராமத்தை, பல ஆண்டுகளாக உருவாக்கி வருகிறது. எனவே சீனா, அதன் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் தான் கிராமத்தை கட்டமைத்து வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkata Krishnan - Toronto ,கனடா
11-நவ-202100:27:55 IST Report Abuse
Venkata Krishnan நாங்க பட்டன எல்லாம் வச்சுக்காம நேரா ஒப்பந்தம் போட்டு காசு வாங்கி எங்க போடணுமோ அங்க போட்டு அமைதியா இருப்போம்.நாடு வித்தாலும் நாமதானுங்க முக்கியம்
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
10-நவ-202123:08:36 IST Report Abuse
Easwar Kamal அது எல்லாம் சேரி இவளவு பெரிய கப்பல் நிறுத்த இடம் உண்ட பாகிஸ்தானில். கொஞ்சம் நகர்ந்தாலே இந்தியாகுல வன்துருவ. அப்ப வச்சு செஞ்சுருங்க. முதலில் இந்த கப்பல் ஓடுவதர்ட்க்கும் பராமரிக்கவும் டப்பு இருக்க? அதற்கும் சீனாக்காரன் கிடதன கய் எந்தனும். உடனே இந்தியாகுட சண்டை போட முடியாது. உனக்கு இருக்கிற கடல் பரப்பு ரொம்ப கம்மி இதுல எதுக்கு இந்த பந்தா.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-நவ-202121:29:02 IST Report Abuse
Rajagopal இந்தியா போருக்கு தயாராக வேண்டும். இருமுனைப்போர் வர இருக்கிறது. வடக்கிலிருந்து சீனாவும், மேற்கிலிருந்து பாகிஸ்தானும் இந்தியாவோடு போர் தொடுக்க இருக்கின்றன. அதே சமயம் வங்காளம், கேரளம், பஞ்சாப், காஷ்மீர் என்று பல இடங்களில் உள்நாட்டுக் கலவரங்களும் ஒரே சமயத்தில் தொடங்கும். இந்த முறை வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்ற கொள்கையோடு, பாகிஸ்தான் சீனாவின் கரம் கோத்து இறங்க இருக்கிறது. இந்தியாவிற்குள் பயங்கரவாத தாக்குதல்கள் முதலில் தொடங்கும். நமது ராணுவம் பாகிஸ்தானில் இதனால் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தும். அதை போராக அறிவித்து பாகிஸ்தான் தனது போரை துவங்கும். இது வரை பாக்கிஸ்தான் இந்திய போர்களில் சீனா உள்ளே நுழையவில்லை. இந்த முறை நுழையும். இந்தியாவை பெருமளவிற்கு சேதமாக்கி, அது துண்டு துண்டாக பிரிவதற்கு வகை செய்யும் படி இந்த போர் நடக்கும். பாகிஸ்தானில் பொருளாதாரம் வீழ்ந்து விட்டது. உள்நாட்டு போர் வரும் போல எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. சீனாவிலும் பொருளாதாரம் ஆதி பட்டு விட்டது. பல பெரிய கம்பெனிகள் திவாலாகி விட்டன. மின்சாரம் இல்லை. மக்களை உணவு பொருட்களை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. அங்கும் உள்நாட்டுக்கலவரம் வரலாம். அதனால் இரண்டு நாடுகளும் போரில் இறங்கி மக்களை திசை திருப்ப முயலும் நிலைமை வந்துகொண்டிருக்கிறது. இந்தியா போருக்கு ஆயத்தம் செய்ய வேண்டும் உடனே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X