பொது செய்தி

தமிழ்நாடு

மங்களூரில் ஒன்றிய சேர்மன் தேர்தல்: பாதுகாப்பு பணிகளை எஸ்.பி., ஆய்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய சேர்மன் பதவிக்கான தேர்தல் இன்று நடப்பதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., ஆய்வு செய்தார்.மங்களூர் ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 24 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். ஒன்றிய சேர்மன் பதவிக்கான தேர்தலில் தி.மு.க., சார்பில் சுகுணா சங்கர், அ.தி.மு.க.,வில் மலர்விழி இளங்கோவன் களத்தில் இருந்தனர். சேர்மன் பதவியை கைப்பற்ற 13 கவுன்சிலர்கள்

சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய சேர்மன் பதவிக்கான தேர்தல் இன்று நடப்பதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., ஆய்வு செய்தார்.மங்களூர் ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 24 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.

ஒன்றிய சேர்மன் பதவிக்கான தேர்தலில் தி.மு.க., சார்பில் சுகுணா சங்கர், அ.தி.மு.க.,வில் மலர்விழி இளங்கோவன் களத்தில் இருந்தனர். சேர்மன் பதவியை கைப்பற்ற 13 கவுன்சிலர்கள் தேவை என்பதால் கடும் போட்டி நிலவியது.கடந்தாண்டு சேர்மன் பதவிக்கான ஓட்டுப்பதிவில், தி.மு.க.,- அ.தி.மு.க., பெற்ற ஓட்டுக்கள் சமமானது. குலுக்கல் முறையில் சேர்மன் தேர்வு செய்வதை ஏற்காததால், மறு தேதி அறிவிப்பின்றி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மங்களூர் ஒன்றிய சேர்மன் பதவிக்கான தேர்தல் இன்று (10ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் ஏற்பாடுகளை எஸ்.பி., சக்திகணேஷ் தலைமையில் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். ஓட்டுப் பதிவு நடக்குமிடம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், டி.எஸ்.பி., சிவா, வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, தண்டபாணி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X