இந்தியா

அனைத்திந்திய கட்டட பொறியாளர்கள் ஆலோசனை குழுமத்தின் துவக்க விழா ; முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அனைத்திந்திய கட்டட பொறியாளர்களின் ஆலோ சனை குழுமத்தின் புதுச்சேரி பிரிவு துவக்க விழா மற்றும் 2020-23ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர் கள் சேர்க்கை ஹோட்டல் செண்பகா ரெசிடென்சியில் நடந்தது.முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, விழாவை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். விழாவில், குழுமத்தின் தேசிய தலைவர் விஜயகுமார் கிசான்
 அனைத்திந்திய கட்டட பொறியாளர்கள் ஆலோசனை குழுமத்தின் துவக்க விழா  ;   முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு


புதுச்சேரி : அனைத்திந்திய கட்டட பொறியாளர்களின் ஆலோ சனை குழுமத்தின் புதுச்சேரி பிரிவு துவக்க விழா மற்றும் 2020-23ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர் கள் சேர்க்கை ஹோட்டல் செண்பகா ரெசிடென்சியில் நடந்தது.

முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, விழாவை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். விழாவில், குழுமத்தின் தேசிய தலைவர் விஜயகுமார் கிசான் சனப் பங்கேற்று, புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை துவக்கி வைத்தார்.

இதில், முன்னாள் தலைவர் அஜித் சப்ஜி, தென்மண்டல பிரிவு துணைத் தலைவர் கச்சர்லா ராஜ்குமார், மேற்கு பிரிவு துணைத் தலைவர் சந்தீப் ஷரத் ஷிர்கேத்கர், தெற்கு பிரிவு துணைத் தலைவர் தமிழ்செல்வன், பொது மேலாளர் விஜய விஷ்ணு மாயா, பொருளாளர் சீனிவாசன், ஓய்வுபெற்ற புதுச்சேரி பொறியியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் கோதண்டராமன், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பாபு, முன்னாள் செயலாளர் புருஷோத்தமன், சிவகாந்தன், மணக்குள விநாயகர் கல்லுாரி தேர்வாணைய கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் அடங்கிய மின் னணு நினைவுப் பெட்ட கம் வெளியிட, குழுமத்தின் தேசிய தலைவர் விஜயகுமார் கிசான் சனப் பெற்றுக் கொண்டார். தலைமை ஆலோசகர் குழு தலைவர்கள் சிவகாந்தன், சீனிவாசமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், மணிகண்ட சீனிவாசன், சுந்தரராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.ஏற்பாடுகளை புதுச்சேரி மண்டல தலைவர் அஜித் சந்திரன், செயலாளர் முருகன், பொருளாளர் விமல் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X