மக்காச்சோளம் பயிரில் படைப்புழுக்கள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோளம் பயிரில் படைப்புழுக்கள் ஆய்வு

Added : நவ 10, 2021
Share
வேடசந்தூர் : வேடசந்தூர் ஒன்றியத்தில் ஏராளமான ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. இந்நிலையில் மக்காச் சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. இவற்றை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை, உதவி இயக்குனர் சின்னச்சாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்கள் கூறுகையில், ''மெட்டாரைசியம்

வேடசந்தூர் : வேடசந்தூர் ஒன்றியத்தில் ஏராளமான ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன.

இந்நிலையில் மக்காச் சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. இவற்றை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை, உதவி இயக்குனர் சின்னச்சாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்கள் கூறுகையில், ''மெட்டாரைசியம் உயிர்கொல்லி மருந்தை பயிரின் குருத்தில் படும்படி, கைத்தெளிப்பான் மூலம் தெளித்து வந்தால் படைப்புகளை கட்டுப்படுத்தலாம்'' என்றனர்.வேடசந்தூர் புகையிலை மைய பூச்சியியல் துறை இயக்குனர் வெங்கடேசன், தொழில்நுட்ப அலுவலர் ராஜேந்திரன், வேளாண் அலுவலர் மோகன் குமார், 'அட்மா' திட்ட அலுவலர் ராஜேந்திரன் உடன் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X