வடகிழக்கு பருவமழை தீவிரம்; அணைகள், கண்மாய்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு| Dinamalar

தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை தீவிரம்; அணைகள், கண்மாய்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு

Added : நவ 10, 2021
Share
தேனி : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வெள்ள சேதத்தை தவிர்க்க அணைகள், கண்மாய்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது.வடகிழக்கு பருவமழை அக்.,26ல் துவங்கி தீவிரமாக பெய்து வருகிறது. சோத்துப்பாறை, சண்முகா நதி அணைகள் நிரம்பிய நிலையில், மஞ்சளாறு அணையில் 55 அடியில் (அணையின் உயரம் 57 அடி) நீர் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக (71 அடி) உயர்ந்ததால் 3ம்

தேனி : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வெள்ள சேதத்தை தவிர்க்க அணைகள், கண்மாய்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை அக்.,26ல் துவங்கி தீவிரமாக பெய்து வருகிறது. சோத்துப்பாறை, சண்முகா நதி அணைகள் நிரம்பிய நிலையில், மஞ்சளாறு அணையில் 55 அடியில் (அணையின் உயரம் 57 அடி) நீர் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக (71 அடி) உயர்ந்ததால் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆற்றோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல தண்டோரோ மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வெள்ள சேதத்தை தடுக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் துவங்கியுள்ளது. அதன்படி அணைகளுக்கான நீர்வரத்து, வெளியேற்றம், குளம், கண்மாய்களை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கோட்ட அளவில் சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ., தாலுகா அளவில் சிவில் சப்ளை தாசில்தார்கள் அடங்கிய ஐந்து கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தாலுகாவிற்கு உட்பட்டு ஒருங்கிணைப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் இடம்பெறுவர்.

வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள குமுளிரோடு, கம்பம்ரோடு, குரங்கணி உள்பட 43 இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொது மக்கள் தங்க 66 இடங்களும், கால்நடைகளுக்கு 15 இடங்களும் தயாராக உள்ளன. 198 நீச்சல் வீரர்கள், பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 111 ஆயுதப்படை போலீசார், 57 பரிசல், 2 பைபர் படகுகள் தயாராக உள்ளன.

மண்சரிவை சரிசெய்ய மண் அள்ளும் இயந்திரங்கள்,கனரக வாகனங்களும், மருந்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X