தமிழ்நாடு

பெண் நாய்க்குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்து விட்டுச் செல்வோர் மீது நடவடிக்கை!

Added : நவ 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வடமதுரை : 'பெண் நாய்க்குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்து விட்டுச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி' போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.பத்தாண்டுகளுக்கு முன் பேரூராட்சி தெருக்களில் வளர்ந்த நாய்களுக்கு அரசு சார்பில் கருத்தடை சிகிச்சை செய்து மீண்டும் அதே இடங்களில் விடப்பட்டன. இதனால் எண்ணிக்கை பெருகாமல் கட்டுக்குள் இருந்தது. அதன்பின் பல ஆண்டுகளாக
பெண் நாய்க்குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்து விட்டுச் செல்வோர் மீது நடவடிக்கை!

வடமதுரை : 'பெண் நாய்க்குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்து விட்டுச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி' போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன் பேரூராட்சி தெருக்களில் வளர்ந்த நாய்களுக்கு அரசு சார்பில் கருத்தடை சிகிச்சை செய்து மீண்டும் அதே இடங்களில் விடப்பட்டன. இதனால் எண்ணிக்கை பெருகாமல் கட்டுக்குள் இருந்தது. அதன்பின் பல ஆண்டுகளாக இனப்பெருக்க கட்டுப்பாடு நடவடிக்கை இல்லாததால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவை போதிய உணவு கிடைக்காமல் கோழி, ஆடு, மாடுகளை கடிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. மனிதர்களும் கடிபடும் நிகழ்வுகளும் நடக்கிறது.


இரக்கமற்ற செயல்:


பெண் நாய்கள் கருத்தரித்து குட்டிகள் ஈனும்போது, ஆண் குட்டிகளை வளர்க்க சிலர் ஆர்வம் காட்டுகின்றனர். அதேநேரம் பெண் குட்டிகளை வளர்க்க விரும்புவோர் குறைவு. இதனால் அவற்றை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விட்டுச் செல்லும் கொடுமை அரங்கேறுகிறது. உணவு தேடும் பக்குவம் இல்லாத நிலையில் அவை பசியால் துடிப்பது மனிதர்களை வேதனை அடைய செய்கிறது.


போலீஸ் நடவடிக்கை தேவை


இதுகுறித்து அய்யலுார் உயிர்வனம் அறக்கட்டளை நிறுவனர் வி.பி.சுப்பிரமணி கூறியதாவது: இந்தக் கொடுமை எல்லா இடங்களிலும் உள்ளது. அந்த பச்சிளம்குட்டிகள் தாயை பிரிந்து கதறுவது பெரும் அவலம். நேற்று முன்தினம் இரவு வடமதுரை ஒன்றிய அலுவலகம் அருகே அங்கன்வாடி பகுதியில் சில நாய்க்குட்டிகளை யாரோ விட்டுச் சென்றுள்ளனர். இத்தகைய நபர்களை கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து தண்டிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி போலீசில் புகாரும் அளித்துள்ளோம். நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-202117:08:16 IST Report Abuse
Ram Pollachi ஆதரவின்றி பசியால், அடிபட்டு உயிருக்கு போராடும் நாய்மார்களை... பாதுகாக்க பல அன்பு உள்ளங்கள் இருக்கிறார்கள் ஒரு போன் போட்டால் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார்கள். புகார் கொடுப்பதை விட்டுவிட்டு நெம்பரை கண்டுபிடிங்க.... நண்பரே!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X