பொது செய்தி

தமிழ்நாடு

மயிலாடுதுறை, திருவாரூரில் விடிய விடிய கனமழை

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விடியவிடிய பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மங்கைநல்லூர், மணல்மேடு, சீர்காழி தரங்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது.மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகரில் மழைநீர் வடிகால் வசதியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மயிலாடுதுறை, மழை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விடியவிடிய பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மங்கைநல்லூர், மணல்மேடு, சீர்காழி தரங்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது.


latest tamil newsமயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகரில் மழைநீர் வடிகால் வசதியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சம்பா நாற்றுகள் நடவு பணிகள் மேற்கொண்டுள்ள நிலையில் தொடர் கனமழை பெய்து வருவது விவசாயிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மாவட்டத்திலுள்ள இருபத்தி எட்டு மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில்

மயிலாடுதுறை 138.70 மி.மீ

மணல்மேடு 120 மி.மீ

சீர்காழி 127.20 மி.மீ

கொள்ளிடம் 110.40 மி.மீ

தரங்கம்பாடி 158 மி.மீ

சராசரியாக 130.96 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சராசரியாக 14 செ.மீ., மழை பதிவாகியது.

அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 21.5 செ.மீ., வலங்கைமானில் 12.12 செ.மீ., மன்னார்குடியில் 14 செ.மீ., மழை பதிவாகியது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-நவ-202116:56:22 IST Report Abuse
Vijay D Ratnam ஸ்டாலின்தான் வந்துட்டாரு, நல்லாட்சி தரப்போறாரு, அதுதான் அதுதான் மக்களோட விருப்பம். அதிலும் டெல்டா மாவட்ட மக்கள் அறிவார்ந்த மக்கள். டெல்டா பாசன விவசாய மக்களுக்கு நல்லது மட்டுமே செய்தார் ஜெயலலிதா. அதுபோல துரோகம் மட்டுமே செய்தவர் கருணாநிதி. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க கையெழுத்து போட்டவர் இந்த ஸ்டாலின். அதை கிழித்து குப்பையில் தூக்கி போட்டு விவசாயத்தை காப்பாற்றியவர் ஜெயலலிதா. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா போராடி பெற்ற வெற்றியை அரசு கேஜெட்டில் வெளியிடாமல் இழுத்து அடித்து துரோகம் செய்தவர் கருணாநிதி. பிறகு வந்த ஜெயலலிதா உச்சநீதிமன்ற ஆணையை கேஜெட்டில் வெளியிட்டு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க போராடி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. ஆனால் திருவாரூரில் கருணாநிதி கழட்டி போட்ட செருப்பை நிறுத்திவைத்தால் கூட ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள் அந்த தொகுதி மக்கள். அவ்வளவு அறிவுபூர்வமாக சிந்தித்து வாக்களிப்பவர்கள்.
Rate this:
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
10-நவ-202117:37:41 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன்////டெல்டா பாசன விவசாய மக்களுக்கு நல்லது மட்டுமே செய்தார் ஜெயலலிதா./// அதுதான் “கஜா” புயலின்போது பார்த்தோமே... விஜய் டி.ரத்தினம்...? இன்னைக்கு வரைக்கும் எழுந்திருக்கல... திருவாரூர், நாகை மாவட்ட மக்கள்.....
Rate this:
Cancel
10-நவ-202109:28:02 IST Report Abuse
அப்புசாமி எந்த ஊரில் மழை பெஞ்சா என்ன? அதே சாக்கடை அடைப்புகள். அதே ஜாம். பொறுப்பில்லாத அதே ஜனங்கள். அதே ஆட்டையப் போடும் அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள். எப்படி உருப்படும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X