6 இடங்களில் இன்று பட்டா திருத்த முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

6 இடங்களில் இன்று பட்டா திருத்த முகாம்

Added : நவ 10, 2021
Share
தேனி : தேனி மாவட்டத்தில் இன்று (நவ.10) பட்டா திருத்தம் செய்ய 6 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.தேனி அருகே தப்புக்குண்டு ஊராட்சி அலுவலகம், ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம், பெரியகுளம் அருகே எண்டப்புளி, உத்தமபாளையம் அருகே சின்னஓவுலாபுரம் சமுதாய கூடங்கள். நாராயணத்தேவன்பட்டி (தெற்கு) ஆர்த்தி மண்டபம், போடி அருகே உப்புக்கோட்டை வி.ஏ.ஓ., அலுவலகத்தில் காலை 10:00 முதல்

தேனி : தேனி மாவட்டத்தில் இன்று (நவ.10) பட்டா திருத்தம் செய்ய 6 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

தேனி அருகே தப்புக்குண்டு ஊராட்சி அலுவலகம், ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம், பெரியகுளம் அருகே எண்டப்புளி, உத்தமபாளையம் அருகே சின்னஓவுலாபுரம் சமுதாய கூடங்கள். நாராயணத்தேவன்பட்டி (தெற்கு) ஆர்த்தி மண்டபம், போடி அருகே உப்புக்கோட்டை வி.ஏ.ஓ., அலுவலகத்தில் காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை முகாம் நடக்கிறது.இதில் பட்டாவில் உள்ள சிறிய அளவிலான பிழைகளை திருத்தம் செய்யலாம். முதியோர் ஓய்வூதியம், வீட்டு மனைபட்டா, ஆக்கிரமிப்பு வரன்முறைப்படுத்தல், சான்றிதழ்கள், குடிநீர், ரோடுவசதி தொடர்பான மனுக்களும் அளிக்கலாம் என கலெக்டர் முரளீதரன் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X